எதிர்வரும் ஒக்டோபர் 3 ம் திகதியன்று காலை 10:00
மணிக்கு மீண்டும் டெசோ மாநாடு நடைபெறும் என அந்த அமைப்பின் தலைவரும், திமுக
தலைவருமான கருணாநிதி அறிவித்துள்ளார்.
திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில்
நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு, அந்த அமைப்பின்
உறுப்பினர்களுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 12 ம் திகதியன்று டெசோ மாநாடு சென்னையில் நடைபெற்ற நிலையில், மீண்டும் அக்கூட்டத்தை கருணாநிதி கூட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டெசோ மாநாட்டில் ஈழத்தமிழருக்காக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் ஒரு டெசோ மாநாடு ஏன் எதற்காக என்பது இன்னமும் அறிவிக்கவில்லை.

0 Responses to மீண்டும் டெசோ மாநாடு: அடுத்த வாரம் ஆரம்பம்