Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்வரும் வியாழக்கிழமை, (நவம்பர் 1) ஜெனிவாவின் ஐ.நா மனித உரிமைகள் அமர்வில் இலங்கை சார்பில் உரை நிகழ்த்தப்படவுள்ளது.

உலகளாவிய காலக்கிரம மீளாய்வு கூட்டத்தொடர் கடந்த அக்.23ம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகியது. ஒவ்வொரு நாடும் தமது சமகால மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் ஏனைய உறுப்பு நாடுகள் முன்னிலையில் உரையாற்றி அறிக்கை சமர்ப்பித்து வருகின்றன. இதன் போது இந்த அறிக்கைகளில் சந்தேகம் இருப்பின் ஏனைய நாடுகள் முன்கூட்டியோ அல்லது, அந்நாடு உரை நிகழ்த்திக்கொண்டிருக்கும் போதோ கேள்விகளை எழுப்ப முடியும்.

கடைசியாக 2008இல் இலங்கை தனது மனித உரிமைகள் நிலவரங்கள் தொடர்பில் இக்கூட்டத்தொடரில் உரையாற்றியிருந்தது. எனினும் கடந்த 2009ம் ஆண்டு போர் முடிவடைந்ததன் பின்னர் முதன்முறையாக தற்போதே இலங்கை, ஏனைய அனைத்து ஐ.நா உறுப்பு நாடுகளினதும் முன்னிலையில் இவ்வாறானதொரு உரையை மீண்டும் நிகழ்த்துகிறது. இதனால் இவ்விகராம் மனித ஆர்வலர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது.

இதன் போது இலங்கையிடம் கேட்பதற்காக பல நாடுகள் கேள்விகளை முன்கூட்டியே சமர்ப்பித்துள்ளன. குறித்த அமர்வின் போது 99 நாடுகள் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொடர்பிலான கேள்வி நேரத்தை அந்நாடுகள் நன்கு பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் தலா ஒரு நிமிடம் 12 வினாடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

0 Responses to நவ. 1 : இலங்கை குறித்த ஐ.நா & உலக நாடுகளின் கேள்விகளுக்கு விடை கிடைக்குமா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com