ஜெர்மனி , பெர்லின் நகரில் 2ம் லெப்டினண்ட் மாலதியின் 25ம் ஆண்டு நினைவாக
(30.09.2012) சனிக்கிழமை அன்று உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக
நடைபெற்றது.
தாய் மண்ணுக்காக சமராடி வீரப் பெண்ணாக வீர காவியம் அடைந்த தமிழீழத்தின் முதல் வீராங்கனையான 2ம் லெப். மாலதியின் 25ம் ஆண்டு நினைவாக ஈகைச் சுடரேற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது .
2 ம் லெப். மாலதியின் நினைவாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் மேசைப்பந்தாட்டம் மற்றும் பூப்பந்தாட்டம் இடம்பெற்றது .
இப் போட்டிகள் ஆண் , பெண் , மற்றும் வயதுப் பிரிவுகளில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டது .குறிப்பாக சிறுவர்கள் மேசைப்பந்தாட்டத்தில் மற்றும் பூப்பந்தாட்டத்தில் மிக ஆர்வமாக திறமையுள்ளவர்களாக காணப்பட்டார்கள் .பூப்பந்தாட்டத்தில் ஆண் , மேற்பிரிவில் விளையாட்டு வீர்கள் அதிஉயர் திறமை உள்ளவர்களாக காணப்பட்டார்கள் .வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வாகை தேசியச் சின்ன கிண்ணங்கள் பரிசளிக்கப்பட்டது .
அனைத்து விளையாட்டு வீரர்களும் தாம் பங்குபற்றியதோடு நில்லாமல் அனைத்து விளையாட்டுப்போடிகளையும் சிறப்பாக நடாத்துவதற்கு பெரும் பங்களிப்பை வழங்கினர் .
மாலதியின் வீரத்தையும் தியாகத்தையும் தமிழீழப் பெண்களின் தலை நிமிர்வையும் நெஞ்சில் தாங்கியபடி பல வருடங்களாக தமிழ் பெண்கள் அமைப்பு ஜெர்மனி இவ்வாறன விளையாட்டுப்போட்டிகளை முன்னெடுப்பது இங்கு குறிப்பிடத்தக்கது .
தமிழ் பெண்கள் அமைப்பு - ஜெர்மனி

0 Responses to 2 ம் லெப். மாலதியின் நினைவாக ஜெர்மனி , பெர்லினில் நடைபெற்ற உள்ளரங்க விளையாட்டுப் போட்டிகள்