மத்திய
அரசின் பொருளாதார சீர்திருத்த கொள்கைகளை விளக்கி காங்கிரஸ் சார்பில் நாடு
முழுவதும் பிரச்சாரக் பொதுக்கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடக
மாநிலம் மங்களூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்
சோனியா காந்தி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது அவர், ‘’பாரதீய ஜனதா எங்களுக்கு எதிரான பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. அரசுக்கு அவப்பெயரை உருவாக்க முயற்சிக்கிறது. நாம் ஒற்றுமையுடன் அதனை எதிர்கொள்ள வேண்டும். ஊழல் அரசான கர்நாடக பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
கடந்த 5 ஆண்டுகளில் கர்நாடக அரசுக்கு மத்திய அரசு ரூ.80 ஆயிரம் கோடி நிதி வழங்கியிருக்கிறது. அந்த பணத்தை அரசு என்ன செய்தது?
அந்த பணம் மக்களுக்கு சென்றடைந்ததா அல்லது மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சிலிண்டர்களுக்கான கட்டுப்பாடு மற்றும் சீர்திருத்த கொள்கைகள் தவிர்க்க முடியாதது.
சர்வதேச
சந்தையில் எண்ணெய் விலையை நாம் கட்டுப்படுத்த முடியாது. எனவேதான், கேஸ்,
பெட்ரோல் விலையை உயர்த்தும் அளவுக்கு தள்ளப்பட்டி ருக்கி றோம். சில்லரை
வணிகத்தில் அன்னிய நேரடி முதலீடு வந்தால் விவசாயிகளுக்கும்,
மார்க்கெட்டுக்கும் நேரடி தொடர்பு ஏற்படுவதுடன், நுகர்வோருக்கும் குறைந்த
விலையில் பொருட்கள் கிடைக்கும்.
உலக
பொருளாதார நெருக்கடி காரணமாக வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசு ஊழலுக்கு எதிராக போராடுவதில் முனைப்பு
காட்டுகிறது. அதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு
வந்தோம்.
லோக்பால் மசோதாவை கொண்டு வர ஐக்கிய முற்போக்கு கூட்டணி விரும்பியது. ஆனால் அதனை ராஜ்யசபையில் நிறைவேற்றவிடாமல் பா.ஜனதா தடுத்துவிட்டது’’என்று பேசினார்.
லோக்பால் மசோதாவை கொண்டு வர ஐக்கிய முற்போக்கு கூட்டணி விரும்பியது. ஆனால் அதனை ராஜ்யசபையில் நிறைவேற்றவிடாமல் பா.ஜனதா தடுத்துவிட்டது’’என்று பேசினார்.




0 Responses to ஊழலுக்கு எதிராக போராட விரும்புகிறோம்: சோனியா காந்தி பேச்சு