Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள டாக்டர் நடேசன் ரோடு இ டிப்போ தெருவில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் இன்று (25.10.2012) காலை சாலை மறியல் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலை மறியல் செய்த மக்கள் நக்கீரன் இணையதளத்திடம் பேசியபோது, 


டாக்டர் நடேசன் ரோடு இ டிப்போ தெருவில் ஒரு மாதமாக சாக்கடை நீர் தெருவெல்லாம் தேங்கி கிடக்கிறது. அதனை மிதித்துக்கொண்டுதான் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள், அலுவலகத்துக்கு செல்வோர் உட்பட அனைவரும் செல்கின்றனர். இதனால் கொசுக்கள் பரவி டெங்கு காய்ச்சல் வர துவங்கிவிட்டது.

தேங்கி கிடந்த சாக்கடை நீர் நாளடைவில் குடிநீரில் கலந்து வீட்டுக்குள் வரும் குழாய் தண்ணீரில் கழிவுநீராக வருகிறது. எத்தனையோ முறை இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. கவுன்சிலரும் கண்டுகொள்வதில்லை.

இதனை பொறுக்கமுடியாமல்தான் இன்று சாலையில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்கிறோம். இனிமேலாவது உடனடியாக இந்த கழிவுநீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரசாக கோஷமிட்டனர்.

0 Responses to குடிநீரில் கழிவுநீர் கலப்பு என புகார்: சென்னை திருவல்லிக்கேணியில் பொதுமக்கள் மறியல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com