நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், நவம்பர் மாதம் முதல் நாளன்று இடம் பெற உள்ள கூட்டத்திற்காக இலங்கை சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக பல்வேறு நாடுகளும் நியாயமான சில கேள்விகளை எழுப்பியுள்ளன.
நவம்பர் மாதம் முதல் திகதி ஐ.நா.வின் மனித உரிமைக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக பல முனைகளிலும் நெருக்கடி கொடுக்கப்படும் ஒரு சூழ்நிலையில், இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்.
இதை தி.மு.க. போன்ற ஆளும் கூட்டணி கட்சிகள் வற்புறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளை, தமிழர்களை அழித்த இடத்தில் போர் வெற்றிச் சின்னம் ஒன்றினை ராஜபக்ச அரசு நிறுவி, சிங்களவர்கள் கூட்டம் கூட்டமாய் வடக்குப் பகுதிக்குச் சென்று கண்டுகளித்து வருவதற்கு ஏற்பாடு செய்கிறது என்பது எவ்வளவு ஆணவ அகங்காரச் செயல் என கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும்: கி.வீரமணி