Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மெக்ஸிக்கோ வளைகுடாவில் அதிக ஆழமும் வளமும் உடைய எண்ணெய்க் கிடங்கு (பெற்றோலியம்)
ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக  மெக்ஸிகோ நாட்டின் அதிபர் பெஃலிப்பே கல்டெரோன் அறிவித்துள்ளார். இந்த எண்ணெய்க் கிடங்கிலிருந்து 75 மில்லியன் தொடக்கம் 125 மில்லியன் வரையிலான பரெல்கள் (barrels) எண்ணெய் தேங்கியிருப்பதாகத்  தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த எண்ணெய்க் கிடங்கு, மெக்ஸிகோவின் டமௌலிபாஸ் மாநிலத்தின் மற்றாமோரோஸ் நகரிலிருந்து 250 Km கிழக்கே அமைந்துள்ளது. கடந்த சில வருடங்களில் கண்டு பிடிக்கப் பட்ட எண்ணெய்க் கிடங்குகளில் இதுவே மிகப் பெரியது. இதற்கு Supremus 1 எனப் பெயரிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் எண்ணெய் உற்பத்தி நிறுவனமான 'பெமெக்ஸ்' (Pemex) இனால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  'Pemex' நிறுவனம் உலகின் 7 ஆவது மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனம் என்பதுடன் மெக்ஸிக்கோவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுமார் 2900 மீட்டர் ஆழமுடைய Supremus கிடங்கு உலகின் எட்டாவது ஆழமான எண்ணெய்க் கிடங்கு ஆகும். மேலும் கடந்த 40 நாட்களில் கல்டெரோனால் அறிவிக்கப்பட்ட இரண்டாவது எண்ணெய்க் கிடங்கு ஆகும்.

மெக்ஸிக்கோ தற்போது 22 எண்ணெய்க் கிணறுகளைத் தோண்ட திட்டம் தீட்டியுள்ளது. இவற்றில் 15, அதிபர் கல்டெரோனின் ஆட்சிக் காலத்தில் ஏற்கனவே தோண்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to மெக்சிக்கோவில் மிக அதிக வளமுடைய எண்ணெய்க் கிடங்கு கண்டுபிடிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com