Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

119 தேமுதிக நிர்வாகிகள் மீது வழக்கு?

பதிந்தவர்: ஈழப்பிரியா 29 November 2012

சேலம் மாவட்டம் தலைவாசலில் தமிழக முதல்வரைப் பற்றி அவதூறாக பேசினார்கள் எனும் குற்றச்சாட்டில் தேமுதிக எம்.எல்.ஏ க்கள், நிர்வாகிகள் என  7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேலும், அவர்களுடன், 119 தேமுதிக நிர்வாகிகள் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
  
 கடந்த திங்கட்கிழமை சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்த தேமுதிக பொதுக்கூட்டத்தின் போது, குறித்த எம்எல்ஏக்கள் தமிழக முதல்வரை அவதூறாகப் பேசினார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது. முதல்வரை அவதூறாகப் பேசியதுடன் தம்மையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக குற்றம் சாட்டியுள்ள காவல்துறையினர் அவர்களில் 7 பேரை கைது செய்துள்ளனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தேமுதிக பொது செயலாளர் விஜயகாந்த், தேமுதிகவினர் மீது பொய்வழக்கு போட்டு செயலிழக்க செய்யலாம் எனும் தமிழக அரசின் கனவு பகல் கனவாகவே முடியும். தேமுதிகவினர் எந்தவிதமான பொய் வழக்கையும் நீதி மன்றத்தில் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

0 Responses to 119 தேமுதிக நிர்வாகிகள் மீது வழக்கு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com