Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநில முதல்வர்கள் இன்று  பெங்களூருவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்று தெரிகிறது.

கர்நாடகம், தமிழகத்துக்கு காவிரியில் நீர் தருவது தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில் வந்தபோது, இரு மாநில முதல்வர்களும் பேசி சுமுகமான தீர்வு காணவேண்டும் என்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

இதை அடுத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையிலான குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் பெங்களூரு புறப்பட்டு சென்றுள்ளார். கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டரும், தமது பொதுப்பணித்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சுமுகமான தீர்வு காணவே இரு மாநில முதல்வர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளோம். இரு தரப்பு பிரச்சனை குறித்து விரிவாகப் பேச்சு வார்த்தை நடத்த தமிழக முதல்வரும் சம்மதம் தெரிவித்து உள்ளார்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னரே தீர்வு குறித்து முடிவு எடுக்க முடியும் என்றும் ஜகதீஷ் ஷட்டர் தெரிவித்து இருக்கிறார்.
1997 ஆம் ஆண்டு கடைசியாக அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியும், அப்போதைய கர்நாடக முதல்வர் ஜே.ஹெச் பட்டேலும் சந்தித்துப் பேசினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குப் பிறகான 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷட்டரும்  சந்தித்து காவிரி பிரச்சனைக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

0 Responses to தமிழகம் கர்நாடகா ஆகிய இருமாநில முதல்வர்கள் இன்று பேச்சுவார்த்தை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com