Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தேசத்தின் விடுதலையை நோக்கிய தேசப் புதல்வர்களி​ன் கனவை நனவாக்க சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் ஒன்றுகூடுங்கள் என பிரித்தானி​யா தமிழர் பேரவை அறிவித்துள்ளது.

தனக்காக வாழாது பிறர்க்காக வாழ்வது அரிது, அதனினும் தியாகத்தின் எல்லைக்கே சென்று பிறர்க்காக தன் உயிரையே அர்ப்பணிப்பவர்கள் அரிதினும் அரிது. வரலாற்றில் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடிய எத்தனையோ இனங்களையும் அதில் போராடியவர்களையும் அறிந்திருக்கின்றோம்.

எமது வரலாற்றில் சம காலத்திலே எம்முடைய சகோதரர்கள், எம்முடைய உறவினர்கள், எம் மூத்தோர்கள், எம் நண்பர்கள் காவியமாகியதை நேரடியாக நாம் சந்தித்து இருக்கின்றோம்.
அவர்கள் எந்த ஒடுக்குமுறைக்கு எதிராக விடுதலையை வேண்டி போராடினார்களோ அந்த ஒடுக்குமுறை இன்றும் தொடர்கிறது.

எமது இனம் தொடர்ந்து போராடும், எம் தாயகத்தை விடுதலை செய்யும் என்ற நம்பிக்கையுடன் தம் உயிரை அர்ப்பணித்தார்கள் அந்த உத்தமர்கள். அந்த கனவு ஈடேற வேண்டும்.

ஓயாத அலைகளாக தம் வாழ் நாள் முழுவதும் விடியளுக்கான வேள்வியில் தொடர்ச்சியாக உழைத்த அதிமானுடர்களின் வழியில் அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக நாமும் சபதம் எடுப்போம். தேசத்தின் விடுதலையை நோக்கிய எமது தொடர்ச்சியான நேர்மையான செயற்பாடுகளே அந்த உத்தமர்களின் கனவை நனவாக்கும்.

மக்கள் ஒவ்வெருவரும் போராட வேண்டியது காலத்தின் கட்டாயம். தொடர்ச்சியான மக்கள் போராட்டம் தேசத்தின் விடியலை துரிதப்படுத்தும்.

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு தொடருகின்றது, தமிழ் மக்களை இன அழிப்பில் இருந்து காப்பாற்ற ஐ.நா தவறியுள்ளது.

நடந்தனவற்றை அறிந்திருந்தும் சர்வதேச சமூகம் எமது மக்களைக் காப்பாற்றத் தவறியுள்ளது.

தமிழ் மக்களைக் காப்பாற்றுவதில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐ.நாவை வலியுருத்துவதற்கு ஒன்றுபடுவோம்.
ஒடுக்கப்படும் எம் மக்களுக்காக குரல் கொடுக்க எம்முடன் இணையுங்கள்!

எதிர்வரும் திங்கட்கிழமை (10 December 2012)  FCO விற்கு முன்னால் (1 King Charles Street, London SW1A 2AH) அருகில் உள்ள நிலக்கீழ் புகையிரத நிலையம் - Westminster என்ற முகவரியில் மாலை 4:00 மணிமுதல் 6:00 மணிவரைக்கும் நடைபெறவிருக்கும் ஒன்றுகூடலில் கூடுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

tamilmedia@tamilsforum.com

0 Responses to தேசப் புதல்வர்களி​ன் கனவை நனவாக்குவோ​ம்: பிரித்தானி​யா தமிழர் பேரவை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com