Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சில நாட்களுக்கு முன் அமெரிக்காவின் நியூயோர்க், நியூஜேர்சி உட்பட 15 மாகாணங்களைத் தாக்கிய 'சாண்டி' புயலின் கோர தாண்டவத்தால் இதுவரை 102 பேருக்கும் அதிகமாகனோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை வரை அங்கு துண்டிக்கப் பட்டிருக்கும் மின்சாரத்தால் அமெரிக்காவின் வடகிழக்கு மாநிலங்களில் பல பகுதிகள் இன்னமும் இருளில் மூழ்கிக் கிடப்பதுடன் இதனால் மில்லியன் கணக்கானோர் அவதிப்பட்டுள்ளனர்.

மேலூம் Gas line கள் துண்டிக்கப் பட்டு கடும் பெற்றோல் எரிபொருள் தட்டுப்பாடும் அங்கு நிலவுகின்றது. மேலும் பெற்றோலை வாங்கும் பொருட்டு ஒவ்வொரு பெற்றோல் நிலையங்களிலும் 1 கிலோமீட்டர் தூரத்துக்கு மக்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். பல இடங்களில் மரங்கள் முறிந்தும் நகரின் மையப்பகுதிவரை கடல் நீர் கணிசமான உயரத்துக்கு உள்ளே புகுந்திருப்பதாலும் போக்குவரத்து இன்னமும் சகஜ நிலைக்ககுத் திரும்பவில்லை.

மன்ஹட்டானில் உள்ள மின்னிலையத்திலும் தீ விபத்து ஏற்பட்டு அது செயலிழந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விமானப் போக்குவரத்து மட்டுமே ஓரளவு சகஜ  நிலைக்குத் திரும்பியுள்ளது. இதேவேளை அடிப்படை வசதிகள் முறையாக இன்னமும் கிடைக்கப் பெறாததால் புயலினால் பாதிக்கப் பட்ட மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் பல வர்த்தக நிலையங்களை சிலர் முற்றுகையிட்டுக் கொள்ளையடித்துள்ளனர்.

'சாண்டி' புயலின் மீட்புப் பணிகள் தொடர்பாக மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதால் நவம்பர் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் 'பாரக் ஒபாமா' கடுமையான போட்டியை எதிர்கொள்ள நேரிடும் எனக் கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to 'சாண்டி' புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கடும் பெற்றோல் தட்டுப்பாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com