Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிக்கும் தீர்மானத்திற்கு திமுகவின் ஆதரவை  பெறும் முயற்சியில் மத்திய காங்கிரஸ் அரசு இறங்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. எனினும் அன்னிய முதலீடு தீர்மானத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம் விளைவித்து வந்தால் அவை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

இந்நிலையில், இத்தீஇர்மானத்தை ஆதரிக்கும் படி பாஜக தலைவர்கள் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி ஆகியோரிடம் பிரதமர் நேரடியாக கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் திமுகவுக்கு நாடாளுமன்றத்தில் 18 எம்.பிக்கள் பலம் உள்ளதால், திமுகவின் ஆதரவை பெற காங்கிரஸ் முயற்சி  மேற்கொண்டுள்ளது. கருணாநிதியை நேரடியாக சந்தித்து ஆதரவை பெற மத்திய மந்திரி குலாம் நபி ஆசாத்தை காங்கிரஸ் மேலிடம் அனுப்பி வைத்துள்ளது. அவர் இன்று பிற்பகலில் சென்னை வருகிறார். மாலையில் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அதன் பிறகு தி.மு.க.வின் நிலைப்பாடு தெரிய வரும் என கூறப்படுகிறது.

சிறுவியாபாரிகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படலாம் என்பதனால், திமுக அன்னிய முதலீடு விவகாரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவிக்காது என உட்கட்சி வட்டாரங்கள் முன்னர் தெரிவித்திருந்தன. எனினும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

0 Responses to அன்னிய முதலீடு : திமுகவின் ஆதரவைக்கோரி கருணாநிதியை சந்திக்கிறார் குலாம் நபி ஆசாத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com