Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகளின்றி நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 32 பேர், வரும் தீபாவளி தினத்துக்கு முதல் நாள் 09ஆம் திகதி (எதிர்வரும் திங்கட்கிழமை) விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி கைதிகள் விடுத்துள்ள கோரிக்கைக்கு அமைவாகவும், இப்பிரச்சினைக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடனும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய இந்த விடயம் ஆராயப்பட்டது. நீதியமைச்சு, சட்டமும் ஒழுங்கும் அமைச்சு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இப்பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தன. இதன் இறுதிக் கட்டமாகவே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் 32 பேரை முதற்கட்டமாக 09 ஆம் திகதி விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கைகள் 09ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் இரண்டாவது கட்டமாக நவம்பர் 20ஆம் திகதி 30 பேர் விடுதலை செய்யப்படவுள்ளனர். எஞ்சியுள்ள கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது என நீதி அமைச்சும், சட்ட ஒழுங்கு மற்றும் சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சு ஆகியன தெரிவித்துள்ளன.

0 Responses to தீபாவளிக்கு முன் 32 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை: விஜயதாச ராஜபக்ஷ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com