Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ்க் கட்சிகள் தேசியக் கொள்கையுடன் செயற்படல் முக்கியம்: ஆய்வாளர் தெய்வீகன்

இலங்கையின் பொதுத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்க் கட்சிகள் தேயக்கொள்கையுடன் செயற்பட வேண்டும் என, அவுஸ்திரேலியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தெய்வீகன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் தொடர்பாக கனடாவின் CTR வானொலிக்கு ஆய்வுக் கருத்துரைத்த அவர், தமிழ் மக்களின் தேசியத் தலைமை நடத்திய வழியில் புலம்பெயர்ந்த மக்களும், அவர்களின் அனுசரணையுடன் தாயக மக்களும் வழிநடக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

தேசியத் தலைமை மெளனமாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில், என்ன நடக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாகவே தற்போதைய தமிழர் தலைமை இருப்பதாகவும், உதாரண புருசர்களாக திகழ்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவுபற்றிக் கூறிய தெய்வீகன், கஜேந்திரகுமார் அணி தேசிக்கொள்கையுடன் தேர்தலில் களமிறங்கி இருப்பதாகவும், சம்பந்தன் அணி ஒஸ்லோ பிரகடனம் எனவும், திம்பு அடிப்படையில் தீர்வு எனவும் குழப்பமான தகவலை வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் எந்தவித அக்கறையையும் வெளிப்படுத்தாத, அல்லது புலம்பெயர்ந்த மக்களது போராட்டம், மற்றும் தமிழ்நாட்டு தீக்குளிப்புக்கள் மத்தியில், எந்தவொரு போராட்டத்தையும் மேற்கொள்ளாது கட்சி அரசியலையே மேற்கொண்டு வருவதாகவும் அவர் கண்டனம் வெளியிட்டார்.

மென்போக்கு அரசியலால், அல்லது கொழும்பில் குளிரறையில் இருந்து தூதரகங்களுடன் பேச்சு நடத்துவதால், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆய்வாளர் தெய்வீகன், இம்முறை தேர்தலில் சிலரை மட்டும் மக்கள் புறக்கணிக்க வேண்டிய நிலையில் இருப்பதால், வாக்களிப்பில் சிக்கல் காணப்படுவதாகவும் கூறினார்.

ஒலி வடிவம்




விட்டுக்கொடுப்பற்ற பேரும்பேசும் அரசியலையே இப்பொழுது மேற்கொள்ள வேண்டும்: ஆய்வாளர் அரூஸ்

ஈழத்தமிழ் மக்கள் அடிபடிந்து போகும், அல்லது சொல்வதைக்கேட்டுச் செய்யும் அடிபணியும் அரசியலைத் தவிர்த்து, தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் பேரம்பேசும் அரசியலை மேற்கொள்ள வேண்டும் என, படைத்துறை, அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொதுத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் தொடர்பாகவும், அதன் ஏதேச்சாதிகாரப்போக்கு பற்றியும் பல்வேறு கண்டனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இவ்வாறான பின்புலத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதாக சிறீலங்கா அரசு கூறிய அன்றே, அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் தமது செயற்பாடுகளை மெளனித்திருந்த அன்றே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டிருக்க வேண்டும் என, படைத்துறை, அரசியல் ஆய்வாளர் அரூஸ் தெரிவித்துள்ளார்.

லண்டனைத் தளமாகக்கொண்ட .பி.சி வானொலிக்கு நேற்றிரவு கருத்துரைத்த அவர், யாழ்ப்பாணம், திருகோணமலை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்பதை ஆணித்தரமாக வலியுறுத்திய அதேவேளை, அந்தக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் விட்டுக்கொடுப்பு அரசியலில் இறங்கியிருப்பதால் அவர்கள் மீண்டும் பதவிக்கு வருவது உகந்தது அல்ல என்பதையும் மறைமுகமாகக் கூறினார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் வலுவாகக் காலூன்றியுள்ள இந்தக் காலப்பகுதியில், மேற்குலகும், இந்தியாவும் தமிழ் மக்களைப் பாவித்து சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனையும் இந்தக் காலப் பகுதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை முற்படுவது போன்று விட்டுக்கொடுப்பு அரசியலை நடத்தாது, தமிழ் மக்கள் பேரம்பேசும் அரசியலை நடத்த வேண்டும் எனவும் அரூஸ் சுட்டிக்காட்டினார்.

மேற்குலகும், இந்தியாவும் ஈழத்தமிழ் மக்கள் விரும்பியது அனைத்தையும் உடனே பெற்றுத்தருவார்கள் என எதிர்பார்க்க முடியாது என்பதையும் குறிப்பிட்ட அவர், இருப்பினும் அவர்களது பகடைக்காயாக தமிழ் மக்கள் இருக்காது, தமது பலம் இழக்காது, ஒருங்கிணைந்து நின்று அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் சிறீலங்காவிற்கு வழங்கிவந்த ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை நிறுத்தப்பட்டதாக அறிவிப்பு வெளியான சில வாரங்களுக்குள் சீனாவும், இந்தியாவும், யப்பானும் இணைந்து சிறீலங்காவிற்கு 600 மில்லியன் வரையிலான அமெரிக்க டொலரை உதவித்தொகையாக அறிவித்துள்ளதையும் அவர் தனது அரசியல் ஆய்வில் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to தமிழ்க் கட்சிகள் தேசியக் கொள்கையுடன் செயற்படல் முக்கியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com