Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வருடம் ஜனவரி 08ஆம் திகதி இரவு அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்டமாக கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பூரண விசாரணை நடத்தப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே பொலிஸ்மா அதிபர் எம்.கே. இலங்ககோன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்ற தினத்தில் இத்தகையதொரு சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டதா? இல்லையா என்பதையும், வழக்கு விசாரணை நடத்த வேண்டுமா? இல்லையா? என்பதையும் சட்டமா அதிபரே தீர்மானிப்பார் என்று பொலிஸ்மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

இதனிடையே, பொலிஸ்மா அதிபர் பணியிலிருந்து நேற்றோடு எம்.கே. இலங்ககோன் ஓய்வுபெற்றுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to அலரி மாளிகை சதித்திட்டம்; விசாரணை அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com