வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தன்று மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன அவையாவன:
1. தேசிய மாவீரர்நாள் அறிக்கை 2012 தமிழீழ விடுதலைப் புலிகள்
2. மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகம்
3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் அறிக்கை
இந்த மூன்று அறிக்கைகளையும் தயாரித்தவர்களின் எண்ண ஓட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் கொழுக்கட்டைக்கும், மோதகத்திற்கும் உள்ள வேறுபாடுபோல உருவ வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன.
இந்த மூன்று அறிக்கைகளிலும் மூன்று முக்கிய பிரிவுகளாக நோக்கலாம்:
01. அறிக்கையின் முதற் பகுதி விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் புகழ்..
02. இரண்டாம் பகுதி சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் படும் பாடு, இப்போது படும் அவஸ்தை, உரிமைகளைச் சிங்கள இனவாதம் வழங்காது என்ற விரக்தி, ஆகியன வரலாற்று ரீதியாக எடுத்துரைக்கப்படுகின்றன.
03. மூன்றாம் பகுதியில் உலக சமுதாயம் ஆற்றிவரும் பணிகளும், அவை வெற்றி பெறாவிட்டால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி, தமிழீழம் கிடைக்க தொடர்ந்தும் போராடுவோம் என்ற கோஷத்துடன் முடிவடைகிறது.
அறிக்கைகளை தயாரித்தவர்களை முதலில் பாராட்ட வேண்டும்…
ஆனால் மூன்று அறிக்கைகளும் போதியவை அல்ல.. இனி அடுத்த ஆண்டு அறிக்கை எழுதும்போது பின்வரும் விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும்:
01. மூன்று அறிக்கைகளுமே மக்களால் பற்றிக்கொள்ள முடியாத ஓரங்களற்ற, விரல்களில் அகப்படாத வழுகியோடும் பனிக்கட்டிகளாக இருக்கின்றன.
02. சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறையும், அது நகர்ந்த வரலாறும் தமிழ் மக்கள் அறியாததல்ல… திருத்த முடியாத ஒரு கூட்டத்தைப் பற்றியே இன்னும் எவ்வளவு காலம் அறிக்கை எழுதிச் சலிக்கப்போகிறோம்…?
03. அதை விடுத்து… நாங்கள் யார்..? நாம் இப்போது என்ன செய்கிறோம்..? கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாம் எடுத்த நகர்வு என்ன..? அடுத்ததாக நமது தெட்டத்தெளிவான நடவடிக்கை என்ன..? அதற்கான துல்லியமான வேலைத்திட்டம் என்ன..? அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்..? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடினால் பிடிக்க முடியவில்லை.
04. வாய்ப்புக்களை காலமும், உலக சமுதாயமும் நகர்த்தும் அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறி, அதேவேளை நகரும் பல்வேறு நகர்வுகளில் எது சரியான வழி என்ற விடயத்தில் தம்மை அடையாளம் காட்டாமல் மதில் மேற் பூனைகளாக குந்தியிருக்கின்றன.
05. முதலில் போரினால் பாதிக்கப்பட்டு நொந்து நூலாகியிருக்கும் மக்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற பிரகாசமான நம்பிக்கை மொழி அவசியம்.
06. பாலஸ்தீனம் ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்த்து பெறுவதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. கொசோவா தனிநாட்டு அந்தஸ்த்து பெற்றுவிட்டது, இதில் பாலஸ்தீனத்தைப் போல ஐ.நாவில் கண்காணிப்பாளர் அந்தஸ்தையாவது முதலில் தமிழீழத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட நீங்கள் முன் வைக்கவில்லை.
07. சர்வதேச சமுதாயம் நம்மைப் பற்றிக் கொள்ள நாமும் கை நீட்ட வேண்டும், இல்லாவிட்டால் சர்வதேச சமுதாயம் ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது.
08. தமிழீழத்தை அடைவதாயின் முதலில் அடுத்து எட்ட வேண்டிய மிகக் கிட்டிய குறுங்கால இலக்கு என்ன.. அதை அடைய செய்ய வேண்டிய பணிகள் என்ன.. இவைகளை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு மாவீரர் நாள் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.
09. மாவீரன் சங்கர் தலைவரின் மடியில் மரணிக்கவில்லை தலைவர் அருகில் இருக்க கிட்டுவின் மடியில் வீரச்சாவடைந்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள் அது ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.
மாவீரர் நாளில் அறிக்கைகள் வெளியிட்டு கருத்தியலை வழங்கியது பாராட்டுக்குரியது, ஆனால் அதில் ஒரு வளர்ச்சி அவசியம்…
மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்..
அலைகள்.
We only can look at 1 letters except தலைமைச் செயலகம். தலைமைச் செயலகம் and TGTE works together. Don't think people is stupid.