Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலை புலிகளின் முதல் வீர மரணப் போராளி சங்கர்... அவர் வீர மரணமடைந்த நாளான நவ 27ம் தேதியே 1989 இல் இருந்து மாவீரர் நாளாக அறிவிக்கப்பட்டு வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.....சேலம் மேட்டூர் கொளத்தூர் கும்பாரப்பட்டி  என்ற பகுதியில் ஆண்டுதோறும் மாவீரர் நாள் வீர வணக்கம் செலுத்தப்படுகிறது...

 'இங்கு எங்க கிராமத்தில் விடுதலை புலிகள் 80களில் வந்து கிட்டத்தட்ட 7 வருஷம் பயிற்சி செய்து சென்றுள்ளனர்... அவர்கள் பயிற்சி செய்த தடயங்கள் இன்றும் உள்ளன. இங்கு தலைவர் பிரபாகரனும் வந்துள்ளார்..... அப்பொழுது இங்கு தளபதி பொன்னம்மான் மக்களோடு மக்களாக நெருங்கி பழகினார் அவர் மட்டுமல்ல பயிற்சி செய்த அனைத்து புலிகளும் மக்கள் பிரச்சனையை என்றால் ஓடோடி வந்து உதவுவர்... எங்கள் குடும்ப உறுப்பினர் போல இருப்பார்கள். அவர்களை பொடியன்கள் என்று தான் அழைப்பார்கள்...

மூர்த்தி சிறுசு ஆனா கீர்த்தி பெருசு என்பது போல அவர்கள் செயல்கள் தீரம் மிக்கதா இருக்கும்...அங்கே நாட்டுல நடந்த ஒரு சமரில் தளபதி பொன்னம்மான் வீர மரணம் அடைய அது எங்களால் தாங்க முடியவில்லை....அப்பொழுதே கிட்டத்தட்ட 5000 பேர்களுக்கு மேல் ஊர்வலமாக மேட்டூர் வரை சென்று எங்கள் வீர வணக்கம் செலுத்தினோம் அவரோட நினைவா இங்க அவருக்கு நினைவு மண்டபம் கட்டி, நவ 27 அன்று, அவர் உட்பட மாவீரர்கள் அனைவருக்கும் நாங்களுக்கும் வீர வணக்கம் செலுத்துவோம் இங்க புலிகள் பயிற்சி செய்ததால புலிகள் ஊர் என சொல்லி சொல்லி மருவி புலியூர் என்றே பெயர் பெற்றுவிட்டது எங்கள் கிராமம்...அந்த வகையில் தமிழகத்திலும் ஒரு 'புலி'யூர் உள்ளதே என்று எங்களுக்கு பெருமையே' என்றார் தி.வி.க தோழர் சூர்யா பிரகாஷ்...மற்றும் அங்கு திரண்ட கருப்பு சட்டையினரும்...

வழக்கமாக மாவீரர் நாள் அன்று ஈழத்தில் மாலை 6.05 மணிக்கு பிரபாகரன் மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அஞ்சலி செய்வார்  பின் உரையாற்றுவார் . 2008 ஆம் ஆண்டு பிரபாகரன் ஈழத்தில் மாவீரர்கள் தின உரையாற்றினார் அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் அவர் நவ 27 இல் உரையாற்றுவார் என ஈழ,சர்வதேச தமிழர்கள் எதிர்பார்பதை போல புலியூர் மக்களும் எதிர்பார்த்தே பொன்னம்மான் நினைவு மண்டபம் வந்தனர் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என அனைவரும் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி வரிசையில் நின்று மாவீரர்களுக்கு தங்கள் வீர வணக்கத்தை செலுத்தினர்... பல குழந்தைகள் பெண் சிறுமிகளே.......

'எங்க பிரபாகரன் மாமா சொல்லியிருக்காரு அதனால தான் நாங்க இங்க வர்றோம் அப்பா அம்மா கூட வந்துருக்கோமே...' என்றார் குட்டி பாப்பா யாழினி......

அதன் பின் அங்கே ஈழ பாடல்கள் ஒலிக்கப்பட ,நாடகங்கள் கலை நிகழ்ச்சிகள்  நடந்தது...

 புலியூரில் நடந்த மாவீரர்கள் தின வீர வணக்க நிகழ்வு வீரத்தை நெஞ்சில் விதைத்தது.....

செய்தி, படங்கள்:  இளங்கோவன்  
 

0 Responses to 'புலி'யூரில் நடந்த மாவீரர்கள் நாள் வீர வணக்கம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com