Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழில் நேற்று மிண்டும் 15 பேர் கைது?

பதிந்தவர்: தம்பியன் 09 December 2012

யாழ் குடாநாட்டில் மீண்டும் கைது நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று சனிக்கிழமை யாழ். புத்தூர் கிழக்கு பிரதேசத்தில் சுமார் 15 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர்களை பயங்கரவாத புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு கொழும்புக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அச்சுவேலி காவல்துறையினர் கைது செய்யப்பட்ட நபர்களின் உறவினர்களுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக யாழ்குடா நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கைகளில் 20க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் சிலர் மீண்டும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையிலேயே நேற்றிரவு இவ்வாறு மீன்டும் 15 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to யாழில் நேற்று மிண்டும் 15 பேர் கைது?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com