Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இயங்கி வரும் சார்லி ஹெப்ட்டோ என்ற வார பத்திரிக்கை அலுவலகம் ஒன்றில் தலை முதல் கால் வரை கருப்பு உடையை போர்த்தி வந்த மர்ம நபர்கள், கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். போலீசார் மீதும் அந்த மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர்கள் 2 பேர் உள்பட 12 பேர் பலியானார்கள். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பித்தனர். தப்பித்துச் சென்ற மர்ம நபர்களை பிடிக்க அந்நாட்டு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.


0 Responses to பத்திரிக்கை அலுவலகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 12 பேர் பலி! (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com