Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு நாட்டில் தமிழ்ச்சோலைகளின் தலைமைப் பணியகம் தனது 14 வது ஆண்டு நினைவினை முத்தமிழ் விழாவாக 29.12.2012 சனிக்கிழமை பிரான்சின் புறநகர் பகுதிகளில் ஒன்றான ஓன்லிசூபா என்னும் இடத்தில் கொண்டாடியது.

காலை 11.00 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய நடனமான இனியம்  அணியினரின் வரவேற்பு நடனத்துடன் பிரதமவிருந்தினர், மாவீரர் கேணல் பரிதியின் பெற்றோர், துணைவியர், தமிழ்ச்சோலை தலைமைப்பொறுப்பாளர், தலைமைச் செயலக செயற்பாட்டாளர்கள், கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் தமிழ்தேசிய செயற்பாட்டாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.



மங்கல விளக்கினை பிரதம விருந்தினராக வருகை தந்திருந்த தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் யேர்மன்   கிளைப்பொறுப்பாளர் திரு. சிறிரவி அவர்களும், பிரான்சின் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மக்கள் தொடர்பு பரப்புரைப் பொறுப்பாளருமாகிய திரு. மேத்தா அவர்களும் ஏற்றி வைத்தனர்.

அதனைத்தொடர்ந்து கேணல் பரிதி அவர்களுடைய பெற்றோர்கள் மாவீரர் கேணல் பரிதி அவர்களதும், அனைத்து மாவீரகளின் நினைவாக ஈகைசுடர் ஏற்றி வைக்க கேணல் பரிதியின் துணைவியாரும், புதல்வியும் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்ததைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.





தமிழ்ச்சோலை கீதம் பாடப்பட்டு வரவேற்பு நடனத்துடன் வரவேற்புரையினை தமிழ்ச்சோலையின் கலைப்பிரிவு பொறுப்பாளர் திரு. காணிக்கைநாதன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார். பிரான்சின் பெரும்பான்மையான பாடசாலைகள் இதில் பங்கு கொண்டு சங்கீதம், பரதநடனம், நாட்டார் பாடல்கள், கிராமிய நடனம், குழுப்பாடல், மாவீரர் பாடல்கள், எழுச்சிபாடல்கள், பட்டிமன்றம், நாடகம், வில்லுப்பாட்டு, நாட்டிய நடனம், போன்ற கலைநிகழ்வுகளை வழங்கியிருதனர்.













தமிழ், தமிழக்கலை ஆசிரியர்கள் தலைமைச்செயலகப்பொறுப்பாளர் திரு. nஐயக்குமார் அவர்கள் உரையாற்றினர். அவர் தனதுரையில் அர்ப்பணிப்புடன், தமிழ்மொழியின் உயர்வுக்காக பாடுபடும் ஆசியர்கள், நிர்வாகிகள் எல்லோரையும் நன்றியோடு கரம் பற்றிக்கொள்வதாகவும்.

தொடர்ந்தும் ஆண்டு 12 கற்றுத்தேறியவர்கள் ஆசிரியர் மற்றும் சிறப்புப் பட்டம் பெறும் வரை அவர்கள் கல்வி கற்பதற்கான விசேட ஏற்பாடுகள் தலைமைப்பணியகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். மேலும் அவை சம்பந்தமாக பயிற்சி ஆசிரியர்களில் ஒருவரான சிறப்புப் பட்டதாரியுமாகிய திரு. தனராஐh அவர்கள் தமிழில் சிறப்புப்பட்டம் பெறுவதற்காக தாய்த்தமிழ்த் திருநாடாம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பல்கலைக்கழத்தில் ஐரோப்பிய ரீதியிலான உரிமத்தை பெற்றுள்ளதையும் அதன் காத்திரமான செயற்பாட்டையும் விளக்கியிருந்தார்.

தமிழ்,தமிழ்க்கலை ஆசிரியரின் பத்து வருடப்பணியாற்றியவர்களை மதிப்பளிப்பு செய்யப்பட்டது. மதிப்பளிப்பினை பிரதம விருந்தினராக வந்திருந்த Nஐர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பொறுப்பாளர் திரு. சிறிரவி அவர்களும், தமிழ்ச்சோலை தலைமைப்பணியக பொறுப்பாளரும் செய்திருந்தனர். திருக்குறள் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் இணைப்பாளர் திருமதி. அ. நகுலேஸ்வரி அவர்களும், தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் பொறுப்பாளருமாகிய திரு. பாலசுந்தரம் அவர்களும் வழங்கியிருந்தனர். ஆண்டு 12 தமிழ் மொழிப் பொதுத்தேர்தலில் சித்தியடைந்த மாணவர்களுக்குச் சான்றிதழும் வழங்கப்பட்டது.







சிறப்புரையை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்  யேர்மன்  பொறுப்பாளர் அவர்கள் வழங்கியிருந்தார். தமிழ்மொழியின் முக்கியத்துவத்தையும், அதனை எவ்வாறு அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வது பற்றியும், உதரணங்களாக தான் தேசப்பணியாற்றும் யேர்மன்   நாட்டில் தமிழ்மொழியில் கல்விகற்று தேர்ந்த தமிழ் மாணவன் யேர்மன்  நாட்டின் அரசால் மதிப்பளிக்கப்பட்ட விடயத்தையும், இன்னுமொரு மாணவன் தமிழீழ மண்ணில் சாதனை படைத்து தமிழீழ அரசால் மதிப்பளிக்கப்பட்ட விடயத்தையும், மொழிவாழ, இனம் வாழ மண்வாழ உழைக்கும் அனைவரும் தமிழீழ தேசம் மீட்கும் போராளிகளே என்றும் இன்றைய சர்வதேச அரசியல் நிலைப்பாடும் அதில் ஈழத்தமிழ் மக்களின் நிலைப்பாடு செயற்பாடுகள் பற்றியும், தமிழ்புத்தியீவிகள்  நாளை எமதுதலைமுறையின் செயற்பாடுகள் பற்றியும் எடுத்தியம்பியிருந்தார்.

காலத்தின் நிலையுணர்ந்த இவரின் சிறப்புரை மக்கள் மனதை சென்றடைந்ததை கரகொலி மூலம் உணரக்கூடியதாகவிருந்தது.











பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் உறுப்பினரும், முன்னைநாள் தலைமையாசிரியருமாகிய திரு. சத்திதாசன் அவர்கள் உரையாற்றியிருந்தார் தமிழ்ச்சோலைகளினதும், தலைமைப்பணியகத்தினதும்  அத்தனை செயற்பாடுகளுக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு என்றென்றும் பேருதவியாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

நன்றியுரையை தலைமைப்பணியகத்தின் செயற்பாட்டாளர் பயிற்சி ஆசிரியர் திரு. அகிலன் அவர்கள் நிகழ்த்தினார். தமிழ் மொழிவாழ்த்துப்பாடலுடன் இரவு 7.30 மணிக்கு முத்தமிழ் விழா 2012 இனிதே நிறைவு பெற்றது. மண்டபம் நிறைந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு முத்தமிழ்விழாவைச்சிறப்பித்திருந்தனர்.

0 Responses to பிரான்சில் தமிழ்ச்சோலை முத்தமிழ் விழா 2012

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com