Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”



 பெண்கள் மீதான கொடுமைகளை கண்டித்து 'விடியல் பெண்கள் மையம்' சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் அதன் தலைவர் தமயந்தி பேசியபோது
'டெல்லி பெண்ணிற்கு ஏற்ப்பட்ட கொடுமை மிகவும் வேதனையானது கண்டிக்கத்தக்கது. ஆனால் இன்று அவருக்காக நடந்த போராட்டங்கள் அவரோடு சுருங்கி போய்விட்டன.

டெல்லி பெண்ணிற்காக இங்கே போராடினோம் போராடுகிறோம் நம் புனிதாவிற்க்காக அங்கே போராடினார்களா? கயர்லாஞ்சியில் தலித் பெண் கொடுமைக்கு உள்ளானார். மணிப்பூரில் மனோரமா பாலியல் கொடுமையால் கொல்லப்பட்டார். ஈழத்தில் கொத்து கொத்தாக பெண்கள் வல்லுறவுக்கு உள்ளாகினர். 


சாதாரண உழைக்கும் பாமர பெண்கள் பாதிக்கப்படும் போது சட்டை செய்யாத உயர் நடுத்தர வர்க்கம் தான் இன்று தங்கள் வர்கத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்காக வீதிக்கு வந்துள்ளனர்.

இது வரவேற்க்கதக்கது தான். ஆனால் இத்தோடு நிற்காமல் பரவலாக எங்கு பெண்கள் பாதிக்கப்பட்டாலும் குரல் கொடுக்கவேண்டும் அதை தடுக்க போராட வேண்டும் அந்த அடிப்படையில் தான் நாங்கள் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்காகவும் போராடுகிறோம். இந்த வருடத்தின் இறுதி போராட்டம் இதுவே நிரந்தரமாய் இறுதி போராட்டமாய் இருக்கும் வண்ணம் பெண்களுக்கு எங்கும் கொடுமைகள் நேராதபடி நாங்கள் களத்தில் இறங்கி உழைப்போம்' என்றார்.

ஆர்ப்பாட்ட இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய பேனர்கள் வைத்துருந்தனர். குட்டி புகைப்பட கண்காட்சி போல இருந்தது. பொதுமக்கள் பரவலாக வந்து நின்று பார்த்துவிட்டு சென்றனர்.
செய்தி, படங்கள்: இளங்கோவன்

0 Responses to டில்லியில் ஏன் புனிதாவிற்​க்காக யாரும் குரல் கொடுக்கவில்​லை! பெண்கள் அமைப்பு கேள்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com