யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கற்கும் மேலும் 6 மாணவர்கள் நேற்று
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5
பேர் மருத்துவபீடத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் முகாமைத்துவ பீடத்தைச்
சேர்ந்தவர்.
பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற இவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகிறது.எனினும் மாணவர்கள் கைது குறித்த எந்தத் தகவலும் தனக்குக் கிடைக்கவில்லை என்று பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி நேற்று மாலை தெரிவித்தார்.ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள 3 மாணவர்களுக்கு மேலதிகமாக 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை யாழ். குடாநாட்டில் கடும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் பல்கலைக்கழகத்தின் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுவிக்கப்படும் வரை கல்விச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் சூழல் இருக்காது என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்னர் அறிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்றைய கைதுகள் இடம்பெற்றுள்ளன.
10 மாணவர்களை தேடியது பொலிஸ்
மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையை யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். தனது பெயர் வெளியிடப்படுவதை அவர் விரும்பவில்லை.
அவர் தெரிவித்ததாவது:
''யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேரை விசாரணைக்கு வருமாறு யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று (நேற்று) அழைப்பு விடுத்திருந்தனர். இது தொடர்பான அறிவிப்பு யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஐவர், முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இருவர், விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த மூவரின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 மாணவர்களையும் பெற்றோருடன் விசாரணைக்குச் செல்லுமாறு யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் கூறியிருந்தார்.இதனை அடுத்து மருத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஐவரும் தமது பெற்றோர் மற்றும் மருத்துவ பீடாதிபதி ஆகியோருடன் இன்று (நேற்று) மதியம் யாழ். பொலிஸ் நிலையத்திற்குச் சென்றனர். அங்கு வைத்து குறித்த மாணவர்கள் ஐவரையும் பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் விசாரணைக்காக கைதுசெய்தனர்.
இதேவேளை, முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவரும் தனது பெற்றோர் மற்றும் முகாமைத்துவ பீடாதிபதியுடன் இன்று (நேற்று) மதியம் யாழ். பொலிஸ் நிலையத்திற்குச் சென்றார். அவரையும் அங்கு வைத்துப் பயங்கரவாத தடுப்புப் பொலிஸார் விசாரணைக்காக கைதுசெய்துள்ளனர்'' என்றார்.
விசாரணைக்காக அழைக்கப்பட்ட ஏனைய நான்கு மாணவர்களின் நிலைமை தொடர்பாக அவரிடம் கேட்டபோது, 'குறித்த நான்கு மாணவர்களோ அல்லது அவர்களினது பெற்றோர்களோ பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இன்று மாலை (நேற்று மாலை) வரை தொடர்பு எதையும் ஏற்படுத்தவில்லை'' என்று தெரிவித்தார்.
மூவர் தொடர்ந்தும் விசாரணையில்
ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களில் மூவர் இன்னும் விடுவிக்கப்படாத நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 7 நாள்களாக அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர் என்று பொலிஸார் கூறுகின்றனர்.மேலும் மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்து யாழ். பல்கலைக்கழகத்தின் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் முடங்கியுள்ளன.பல்கலைக்கழக வளாகத்திற்குச் செல்லவே தமக்கு அச்சமாக இருப்பதாக மாணவர்கள் 'உதயன்' பத்திரிகையிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பில் ஆராயும் வகையில் பல்கலைக்கழக ஆசிரியர்களின் கூட்டம் இன்று அவசரமாகக் கூட்டப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

0 Responses to மேலும் 6 மாணவர்கள் கைது யாழ்.குடாநாட்டில் பதற்றம்; ஏற்கனவே கைதான மூவரும் தொடர்ந்து தடுப்பில்