எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ உறவுகளே
இன்று மனித உரிமை நாள், அதாவது அமெரிக்காவை தளமாக கொண்டு செயற்படுகின்ற ஐ. நா. சபையால் 10.12.1948ம் ஆண்டு மனித உரிமைகளைப் பாதூகாக்க „மனித உரிமை நாள்“ பிரகடனம் செய்யப்பட்டது. ஐ. நா. சபையில்; முப்பது மனித உரிமை அமைப்புகள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன அம்முப்பதையும் ஒன்றிணைத்து ஐ. நா. சபையின் மனித உரிமை அமைப்பு இயங்கிவருகின்றது.
ஐ. நா. சபையின் மனித உரிமை சாசனம் இவ் உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனையும் நிறம் மொழி இனம் மதம்ää ஆண் பெண்; வேறுபாடின்றி சமனாக மதிக்க வேண்டும் எனபதை அடிப்படையாக் கொண்டுள்ளது. ஓவ்வொரு மனிதனுக்கும் வாழ்வுரிமை, கருத்துரிமை, கல்வியுரிமை, அரசியலுரிமை, மதவுரிமை மற்றும் தம்மை தாம் பாதுகாக்கின்ற உரிமையும் உண்டு. எவரும் அடிமைகளாக வாழக் கூடாது என ஐ. நா. சபையின் மனித உரிமை சாசனம் கூறுகின்றது.
மேலும் தமக்கென நிலம், மொழி, கலாசாரம், பண்பாடு, நாகரிகத்தைக் கொண்ட இனம் தம்மை தாம் ஆழும் தகுதியுடையவர்கள், அவர்கள் வேற்றினத்தவரால்; இனவழிப்புக்கு உள்ளாகும் பொழுது பிரிந்து சென்று தம்மை தாம் ஆழலாம் என ஐ. நா. சபையின் மனித உரிமை சாசனம் கூறுகின்றது.
ஐ. நா. சபையின் மனித உரிமை சாசனத்திற்கு உரித்தானவர்கள் தமிழீழத் தமிழர்களும் தான். ஆனால்ää 1948ம் ஆண்டு தமிழர் தேசம் சிங்களவர்களிடம் பறி போனதிலிருந்து தமிழீழத் தமிழர்களோ அடிமை வாழ்வுக்கும், இனவழிப்புக்கும் முகம்கொடுத்து வருகின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையும் வேதனையுமாகும்.
தமிழீழ மக்கள் தம்மால் சிங்கள மக்களுடன் இணைந்து பாதூகாப்பாக, சுதந்திரமாக இனியும் வாழ முடியாது என முடிவெடுத்து ஐ. நா. சபையின் சாசனத்திற்கு அமையச் சனநாயகரீதியாக வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அமைவாகத் தேர்தல் மூலம் பிரிந்து சென்று தம்மை தாம் ஆழ விரும்பினார்கள். ஆனால் சிங்களப் பேரினவாதம் அதை நிராகரித்தது. அதன்பின் அறவழியில் தமிழீழ மக்கள் செய்த போராட்டத்தை சிங்கள பேரினவாதம் தன் ஆயுத பலத்தின் மூலம் நசுக்கிய வேளை மாற்று வழியின்றி ஆயுதமேந்திப் போராடினார்கள் தமிழீழத் தமிழர்கள்.
தன்னை சனநாயக நாடு என கூறி ஐ. நா. சபையில் அங்கத்துவம் கொண்டுள்ள சிங்கள தேசம் தமிழர்களுடைய உரிமைகளை மறுத்து இனவழிப்பை செய்துகொண்டு ஐ. நா. சபையின் சாசனத்தை அவமதித்து மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளை செய்து வருகின்றது என்பதை சர்வதேசத்திற்கு இவ் அறிக்கையூடாக நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
2009ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்டப் போரில் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதம் பாரிய இனவழிப்பு செய்து கொண்டிருந்ததை ஐ. நா. சபை தொடக்கம் மனித உரிமை பேசுகின்ற சர்வதேச நாடுகள் வரை கண்டும் காணாதது போல மௌனம் காத்தது பாரிய தவறாகும். இச்செயலை தமிழர்களாகிய நாம் என்றும் மறவோம்.
வைகாசி மாதம் 2009ம் ஆண்டு இரண்டு லட்சத்திற்கும் மேலான தமிழர்களை கொன்றொழித்து இருபத்தோராம் நூற்றாண்டில் தமிழினத்தின் மீது பாரிய இனவழிப்பை செய்த சிங்கள பேரினவாதத்துடன் எம்மால் ஒன்றாகச் சேர்ந்து வாழ்வது என்றுமே முடியாதது. ஐ. நா. சபையின் மனித உரிமை சாசனத்திற்கு அமைவாக, நாம் சுதந்திரமாக வாழக் காலம் காலமாக ஆண்டு வந்த நிலத்தை மீட்டு ஆழும் வரை ஐ. நா. சபையின் சட்டத்தையும், உலக நாடுகளின் சட்டத்தையும், மனித உரிமை சட்டத்தையும் மதித்து உறுதியுடன் போராடுவோம்.
நாளை மலரப் போகின்ற தமிழீழ அரசு ஐ. நா. சபையின் சட்டங்களை மதித்து மனித உரிமையை காக்குமெனத் தமிழீழத் தமிழர்களாகிய நாம் சர்வதேச நாடுகளுக்கு உறுதியளிக்கின்றோம்.
இவ்வண்ணம்
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
ஊடகப்பிரிவு
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
0 Responses to இன்று மனித உரிமை நாள் - தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி