பள்ளிக்கூடம் சென்ற 7ம் வகுப்பு மாணவி புனிதாவை கடத்தி கற்பழித்து கொடூரமாக கொலை செய்த கொலையாளி பிடிபட்டான்.
தூத்துக்குடி
மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த கிளாக்குளம் கிராமத்தைச்சேர்ந்தவர்
சவுந்தரராஜன். அவருடைய மனைவி இசக்கியம்மாள். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த
மகள் புனிதா ( வயது 13). நாசரேத்தில் உள்ள மகளிர் பள்ளிக்கூடத்தில் 7ம்
வகுப்பு படித்து வந்தாள். சவுந்தரராஜன் ஒரு ஆண்டுக்கு முன்பு
இறந்துவிட்டார். எனவே, மகள்களுடன் உள்ளூரில் உள்ள தனது தந்தை வீட்டில்
வசித்து வந்தார் இசக்கியம்மாள்.தாத்தா வீட்டில் இருந்து ரயில் மூலம் பள்ளிக்கு சென்று வந்தாள் புனிதா. கிளாக்குளத்தில் இருந்து தாதன் குளத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு அரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இந்த வழி காட்டுப்பாதை. அதனால் மாணவிகள் குழுவாக சேர்ந்துதான் ரயில் நிலையத்திற்கு செல்வார்கள்.
அரையாண்டு
தேர்வு நடந்து வருவதால்நேற்று முன் தினம் காலை 7 மணி அளவில் புனிதா தனியாக
புறப்பட்டு சென்றாள். காட்டுப்பாதையில் ரயில் நிலையத்தை நோக்கி
சென்றாள்.
மாலையில் அவள் வீடு திரும்பவில்லை. பள்ளிக்கூடத்தில் விசாரித்த போது அவள் அங்கும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவள் நேற்று காலையில் காட்டுக்குள் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில் கொலையாளி சுப்பையா ( வயது 36) பிடிபட்டான். அவனை போலீசார் கைது செய்தனர்.
புனிதா
கொலை சம்பவம் தொடர்பாக இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை
அடுத்த பாறைக்குட்டம் என்ற பகுதியைச் சேர்ந்த சுப்பையா (36) என்ற நபரை
போலீசார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில்,
பள்ளிக்கு சென்று கொண்டிருந்த புனிதாவை பாலியல் பலாத்காரம் செய்ய
முயற்சித்த போது அவர் சத்தமிட்டதால், துப்பட்டாவால் புனிதாவின் கழுத்தை
நெரித்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சுப்பையா,
பெண்களிடம் தவறாக நடப்பதையே வழக்கமாக கொண்டிருந்திருக்கிறான். கடந்த டிசம்பர் 1ம் தேதி, தனது தங்கை முறையான, சித்தி தாயம்மாளின் மகள் பூர்ணகலா என்பவரிடம் தவறாக நடக்க முயன்றதாக கைது செய்யப்பட்ட சுப்பையா, ஜாமினில் வெளிவந்து அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அவனை தேடி வந்த நிலையில், புனிதாவை கொன்று தற்போது போலீசில் சிக்கியுள்ளான்.
0 Responses to பள்ளி மாணவி புனிதா கற்பழித்துக்கொலை : கொடூர கொலைக்காரன் கைது