Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இத்தாலிய பிரதமர் பதவி விலகினார்

பதிந்தவர்: தம்பியன் 22 December 2012

இத்தாலியின் பிரதமர் மரியோ மோன்டி தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.  இத்தாலில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தல் 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில் மரியோ மோண்டிக்கான ஆதரவை விலக்கிக்கொண்ட இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பேர்லுஸ்கோனி தான் மீண்டும் ஆறாவது தடவையாக தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து,  அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த பின்னர் தாம் பிரதமர் பதவியிலிருந்து மரியோ மோண்டி வாக்குறுதி கொடுத்திருந்தார். அதன் படி அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு வாக்கெடுப்பில் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில் அவர் தற்போது பதவி விலகியுள்ளார்.

எனினும் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அவரே ஆட்சி பொறுப்பை கவனிக்கவுள்ளார்.  எதிர்வரும் 2013 பொது தேர்தலில், பியேர்லுய்கி பெர்சானி தலைமையிலான குடியரசு கட்சி செல்வாக்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 Responses to இத்தாலிய பிரதமர் பதவி விலகினார்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com