Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மேற்குவங்க மாநிலத்தில் விதவைப் பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மால்டா மாவட்டத்தில் உள்ள சாத்மோனி கிராமத்தில் வசிந்து வந்த 35 வயது விதவைப் பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் நேற்றிரவு பாலியல் பலாத்காரம் செய்தது.

அதோடு மட்டுமல்லாது அந்தப் பெண்ணை கடுமையாகத் தாக்கி காயப்படுத்தியதில் படுகாயமடைந்த அந்த பெண்மணி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சாத்மோனி கிராம அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றும் அபு பக்கர் என்பவர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள பொலிசார், குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

டெல்லியில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், மேற்குவங்கத்தில் விதவைப் பெண்ணிற்கு நேர்ந்துள்ள வன்கொடுமை அதிர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது.

0 Responses to விதவைப் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com