தூத்துக்குடி மாவட்டம்
7ம் வகுப்பு மாணவி புனிதா (வயது 13) கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட
சம்பவத்தில் கொலையாளி சுப்பையா( வயது 36) சிக்கினான். சுப்பையாவிடம்
போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவன் போலீசில் பரபரப்பு
வாக்குமூலம் அளித்தான்.
அவன்,
’’எனது சொந்த ஊர் மணியாச்சி அருகே உள்ள பாறைகுட்டம். என் மீது பல்வேறு
வழக்குகள் உள்ளதால் போலீசார் என்னை தேடி வந்தனர். போலீஸ் பிடியில் இருந்து
தப்பிப்பதற்காக கடந்த சில நாட்களாக நெல்லையில் சுற்றி திரிந்தேன். எனது
மனைவியின் வீடு தாதன்குளத்தில் உள்ளதால் அங்கு சென்று தலைமறைவாக இருக்க
நினைத்தேன்.
இதனால் கடந்த புதன்கிழமை மாலை நெல்லையில் நன்றாக மது குடித்து விட்டு
திருச்செந்தூர் செல்லும் ரெயிலில் ஏறி தாதன்குளத்திற்கு சென்றேன். அளவுக்கு
அதிகமாக மது குடித்திருந்ததால் தாதன்குளம் ரெயில் நிலையத்தில் இறங்கியதும்
என்னால் நடக்க முடிக்கமுடியவில்லை. இதனால் அங்கேயே படுத்து தூங்கி
விட்டேன். இரவு முழுவதும் ரெயில் நிலையத்தில் தூங்கிய நான் மறு நாள் காலை
எழுந்து எனது மனைவி வீட்டிற்கு சென்றேன்.
தாதன்குளம்
ரெயில் நிலையம் அருகே உள்ள காட்டுப்பகுதி வழியாக செல்லும் போது அந்த
வழியாக மாணவி புனிதா நடந்து வந்தாள். அவளை பார்த்ததும் எனக்கு மோகம்
ஏற்பட்டது. இதனால் அவளை அடைய நினைத்தேன்.
அப்போது அந்த வழியாக
ஆட்கள் நடமாட்டமும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு புனிதாவை
அங்குள்ள முட்புதருக்குள் தூக்கி சென்று கற்பழிக்க முயன்றேன். ஆனால் அவள்
சத்தம் போட்டு அலறினாள். இதனால் என்னால் அவளை கற்பழிக்க முடியவில்லை.
நடந்த
விவரத்தை புனிதா வெளியே சொன்னால் போலீசில் சிக்கிவிடுவோமோ என்று பயந்தேன்.
இதனால் நான் அவளை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு எனது
மனைவி வீட்டிற்கு சென்று விட்டேன். அங்கு ஒன்றும் தெரியாது போல் இருந்து
கொண்டேன். போலீசார் விசாரணை நடத்தி என்னை கைது செய்து விட்டனர்’’ என்று
வாக்குமூலம் அளித்தான்.
0 Responses to மாணவி புனிதாவை கொலை செய்தது எப்படி?: கைதான சுப்பையா வாக்குமூலம்