Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூடங்குளம் அணுமின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதிளள்ளார்.

தமிழகத்தில் நிலவி வரும் கடும் மின்வெட்டை சமாளிக்க இடைக்கால ஏற்பாடாக தமிழக அரசின் கோரிக்கையை பிரதமர் ஏற்க வேண்டுமென்றும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க தமிழக மின்நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழகத்திற்கே தர வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.கல்பாக்கம், நெய்வேலி, வல்லூரில் மொத்தம் 2,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது. இந்த மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு தர வேண்டுமென்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தமிழகம் தற்போது கடுமையான மின் பற்றாக்குறையால் அவதிப்பட்டு வருவது உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகா வாட் என்ற அளவில் இருக்கும் போது, தற்போது தமிழகத்துக்கு 8 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. சுமார் 4 ஆயிரம் மெகா வாட் மின்சாரம் பற்றாக்குறையாக உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் விரைவில் துவங்கப்பட உள்ள கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இருந்து உற்பத்தியாகும் 2000 மெகாவாட் மின்சாரம் முழுவதுமாக தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு நாங்கள் கோருவதற்கு ஒரு அடிப்படை முன் உதாரணமும் உள்ளது.

ஆந்திராவில் துவக்கப்பட்ட சிம்ஹாத்ரி மின்சார உற்பத்தி நிலையத்தில் உற்பத்தியாகும் 1000 மெகா வாட் மின்சாரம் முழுவதும் ஆந்திராவுக்கே வழங்கப்பட்டது. அதேபோல, கூடங்குளம் மின்சாரம் முழுவதும் தமிழகத்துக்கே வழங்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

0 Responses to கூடங்குளம் அணுமின்சாரம் முழுவதையும் தமிழகத்திற்கு தர வேண்டும்: ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com