Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜீ டிவி (Zee TV) மீது, பிரபல தொழிலதிபர் நவீன் ஜிண்டால் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

தமது தொழில்குழுமத்தை பற்றி எதிர்மறையாக தகவல்களை வெளியிடாமல் இருக்க ஜீ தொலைக்காட்சி ஆசிரியர் ரூ. 100 கோடி லஞ்சம் கேட்டதாக ஜிண்டால் புகார் தெரிவித்துள்ளார்.

இக்குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக, தாம் இரகசிய வீடியோ பதிவுகள் சிலவற்றை (Sting Operation) மூலம் மேற்கொண்டதாகவும், இதில் ஜி டி.வி தம்முடன் நடத்திய பேரம்பேசல்கள் தொடர்பிலான ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும் ஜிண்டால் தெரிவித்துள்ளார்.

இன்று நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகவல்களை வெளியிட்டுள்ள ஜிண்டால், குறித்த பேரம்பேசல் உள்ளடங்கிய ஆடியோ சிடிக்களையும் வெளியிட்டுள்ளார். முதலில் ரூ 20 கோடிக்கு விளம்பரம் தரவேண்டும் என மிரட்டியதாகவும், பின்னர் ரூ.100 கோடி கொடுக்காவிட்டால் ஜிண்டால் குழுமத்துக்கும், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலுக்கும் உள்ள தொடர்பை வெளியிட போவதாக மிரட்டியதாகவும் ஜிண்டால் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆனால், இக்குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள ஜீ டி.வி நிர்வாகம், நாங்கள் தான் ஜிண்டால் குழுமம் ஊழலை மறைக்க எவ்வளவு தொகை கொடுக்கவும் தயாராகியிருந்ததை வெளியில் கொண்டுவர திட்டமிட்டிருந்தோம் என்கின்றனர்.

இந்தியாவின் உருக்கு தொழிலில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக ஜிண்டால் குழுமம் இருப்பதுடன், 40 வருடங்களுக்கு மேலாக இத்துறையில் நீடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

0 Responses to ரூ 100 கோடி கேட்டு மிரட்டியதாக Zee TV மீது நவீன் ஜிண்டால் பரபரப்பு குற்றச்சாட்டு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com