Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான தனது பயணத்தை மீள்பரிசீலனை செய்திருப்பதாக ஐ.நா சபையின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக மனித உரிமை ஆணையாளர்
நவநீதம்பிள்ளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முற்பகுதியில் இலங்கை வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அந்த உத்தேச யோசனை இப்போது மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக ஐ.நா சபை வட்டாரங்களில் இருந்து நேற்று செய்திகள் வெளியாகியுள்ளன.எனினும் இலங்கையின் அரசியல் நிலைமைகள் இப்போதைக்கு சீராக இல்லையென்பதை சர்வதேச அமைப்புக்கள் ஐ.நாவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளன.
எனவேதான் ஆணையாளர் தனது இலங்கைக்கான பயணத்தை மீள்பரிசீலனை செய்துவருகிறார்' என்று ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் உயர்மட்ட இராஜதந்திரியொருவர் குறிப்பிட்டார்.

இதுகுறித்து இந்த அதிகாரி தகவல் தெரிவிக்கையில் 'கடத்தல், காணாமல்போதல், ஊடகங்கள் மீதான அடக்குமுறை, படுகொலைகள் என்பவற்றை ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதிகளுக்கு (ளுPநுஊஐயுடு சுயுPPழுசுவுநுருசு) இலங்கை அரசு அனுமதியளிக்கவேண்டும் என்று கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தக் கோரிக்கைகளுக்கு இலங்கை பதில் அனுப்பவில்லை.

எனவே விசேட பிரதிநிதிகளுக்கு முதலில் அனுமதி வழங்கினால் அதன்பின் இலங்கைக்கான தனது பயணம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணையாளர் சிந்திக்கக்கூடும். இல்லையேல் ஆணையாளரின் பயணம் இடம்பெறாது' என்றும் குறிப்பிட்டார் அந்த இராஜதந்திரி.

இதற்கிடையில் இலங்கையில் நீதித்துறை மற்றும் அதனுடன் சார்ந்த விடயங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஐ.நா. முழுமையான கவனத்தைச் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிற
து.

0 Responses to இலங்கையின் அரசியல் நிலைமைகள் இப்போதைக்கு சீராக இல்லை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com