Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த வாரம் நிலவரப்படி 105 காசுகள் உயர்ந்துள்ளதாகத்  தெரிகிறது.

 இதற்கு காரணம் இந்தியாவில்  நேரடி அந்நிய முதலீடு  அதிகரிப்புத்தான் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜன 13 ஆம் திகதி அன்று, ஒரு அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு 54 ரூபாய் 76 பைசாவாக இருந்தது. இது கடந்த வார இறுதியில், 53 ரூபாய் 71 காசாக குறைந்தது. அதாவது ரூபாய் மதிப்பு 105 காசாக உயர்ந்தது குறிப்பாக வெள்ளிகிழமை அன்று இரண்டரை மாதங்களில் இல்லாத அளவிற்கு ரூபாய் மதிப்பு 68 காசு உயர்ந்தது.

ஒரு தாயின் உண்மைக்கதை!. - காணொளி இணைப்பு

எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரரின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம்!. காணொளி இணைப்பு

நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் வகையிலும், அந்நிய நேரடி முதலீட்டை அதிக அளவில் ஈர்க்கும் வகையிலும் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் இந்திய  சந்தைகளில் அந்நிய நிறுவனங்களின் முதலீடு அதிகரித்து வருகிறது. மேலும் ஏற்றுமதி நிறுவனங்களும் டாலர்களை அதிக அளவில் விற்பனை செய்தன. இதனால் டாலரின் புழக்கம் அதிகமாகி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர் வரும் மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு மிகவும் அதிகரிக்கும் என்றும எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனவே டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் பங்கு சந்தை  நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 Responses to அந்நிய முதலீடு அதிகரிப்பு : அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 105 காசு உயர்வு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com