நீர் மின்சாரம், அணு மின்சாரம் அகைய இரண்டில் மாத்திரமே சுற்றுச்சூழல்
மாசுபடாது. ஆதலால் தான் அணு மின் உலைகளை நான் ஆதரிக்கிறேன் என இந்திய
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தெரீவ்த்துள்ளார்.
குடும்ப திருமண விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ராமநாத புரம் வந்திருந்த அப்துல்கலாம், அணு உலைகளுக்கு தான் ஆதரவு அளிப்பது குறித்து விளக்கம் அளித்தார்.
இது தொடர்பில அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்கால சந்ததியினர் மாசு இல்லாத பூமியில் வாழ அணு உலை மின்சாரமே சிறந்தது. எனவே அதனை மனப்பூர்வமாக ஆதரிக்கிறேன். எதிர்கால சந்ததியினருக்கு நாம் எதை விட்டு செல்கிறோமோ இல்லையோ மாசு இல்லாத பூமியையாவது விட்டு செல்வோமே! தற்போது அணு உலைகள் மேமப்டுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்தான் அமைக்கப் படுகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகம் வேண்டியதில்லை. இதனாலும் நான் அணு உலைகளை ஆதரிக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பார்த்து கொண்டிருக்கும் பேராசிரியர் வேலை நல்ல ஆத்ம திருப்தியுடன் தன்னை வாழவைப்பதாகவும் மகிச்சியுடன் கூறியுள்ளார்.

0 Responses to அணு மின்சாரத்தினால் சுற்றுச்சூழல் மாசுபடாது: அப்துல் கலாம்