Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நியூயோர்க்கில் வசிக்கும் மனரீதியாகப் பாதிக்கப் பட்ட 15 வயதுச் சிறுமி ஒருவர் விஞ்ஞானப் பள்ளி கூடத்தின் வகுப்பறைக்குள்ளே பள்ளி ஆசிரியர் முன் இரு ஆண் மாணவர்களால் மாறி மாறி துஷ்பிரயோகம் செய்யப் பட்டுள்ளார்.

நியூயோர்க்கின் எல்மொன்ட்டிலுள்ள டே பொர்ரேஷ் கல்லூரியின் விஞ்ஞான வகுப்பறையின் உள்ளேயே மனதை அதிரச் செய்யும் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளதாக டெய்லி மெயில் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது

இந்த பாலியற் துன்புறுத்தலில் பாதிக்கப் பட்ட மாணவி k.J என அறிமுகப் படுத்தப் பட்டுள்ளார். இதில் பரிதாபம் என்னவென்றால் வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக் கொன்டிருந்த போதே 10 நிமிட இடைவெளியில் மேசைக்கு அடியில் பாலியல் துன்புறுத்தல் இம்மாணவி மீது மேற்கொள்ளப் பட்டுள்ளது. இம்மாணவி தன்னைத் துஷ்பிரயோகம் செய்தவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது தலையில் பயங்கரமாகத் தாக்கப் பட்டுள்ளார். இச்சிறுமியைத் துன்புறுத்தியதும் வகுப்பறையின் உள்ளே அம்மாணவர்கள் நடனமாடியதும் தெரிந்த போதும் அந்த ஆசிரியர் பதில் நடவடிக்கை ஒன்றும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகின்றது.

அந்த வகுப்பறையில் கல்வி கற்ற 14 மாணவர்களில் இவர் ஒருவரே பெண் மாணவி ஆவார். மேலும் இவர் தனக்கு நடந்த கொடுமையை அடுத்த நாள் ஒரு சமூக சேவையாளரிடம் தெரிவித்தே வெளியுலகுக்கு கொண்டு வந்துள்ளார். பாடசாலை அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முன் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைவிட அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் k.j இன் தாயார் ஊடகங்களுக்குக் கூறுகையில் இது மாணவர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளால் திட்டமிடப்பட்டு அவிழ்த்து விடப்பட்ட கொடுமை என்றும் இது பல மாதங்களாகத் தொடர்ந்துள்ளது எனவும் கூறியுள்ளார். இவ்வாறு நடக்கும் என்று தெரிந்தே அம்மாணவர்களுடன் ஒன்றாக டிசம்பரில் ஒரு அறைக்குள் ஆசிரியர்களால் அடைத்து வைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் இவர்களிடம் இருந்து மாணவி தப்பித்து வந்த போது அவரின் வலது கண்ணில் ஆழமான காயம் காணப் பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போது நியூயோர்க் போலிசாரும் சட்டத்தரணிகளும் இம்மாணவியின் வழக்கைத்  தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

0 Responses to நியூயோர்க்கில் 15 வயதுச் சிறுமி மீது குழுப் பாலியல் துஷ்பிரயோகம்?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com