Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோக சம்பவமும்
அதைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் வலுப்பெற்ற எதிர்ப்பலைகளும் இன்னமும் ஓயாத நிலையில் அதைப் போன்றே இன்னொரு சம்பவம் பஞ்சாப்பில் கடந்த வெள்ளிக்கிழமை நிகழ்ந்துள்ளது. திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தாயான 29 வயதுப் பெண்மணி ஒருவர் மாலையில் 5 மணிக்கு தனியாகப் பஞ்சாப்பில் உள்ள தனது கிராமத்துக்கு பஸ்ஸில் பயணித்துள்ளார்.

இவர் தனியாக 30 நிமிடங்கள் வரை பயணித்ததை அவதானித்த டிரைவர் அவர் இறங்க வேண்டிய இடத்தில் பேருந்தை நிறுத்தாது 5 Km தூரம் தள்ளிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தியுள்ளனர். பின்னர் டிரைவரும் கண்டக்டரும் அப்பெண்ணை வெளியே இழுத்துச் சென்று மோட்டர் சைக்கிளில் தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று பலாத்காரப் படுத்தியுள்ளனர். சற்று நேரத்தில் அவர்களின் நண்பர்கள் 5 பேர் வரை அங்கு வந்து அவர்களும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் தமது இச்சை தீர்ந்த பின் அப்பெண்ணை உரிய இடத்தில் இறக்கிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அப்பெண் தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள போலிஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை வந்து முறைப்பாடு செய்தார். போலீசாரின் உடனடி நடவடிக்கையினால் டிரைவர், கண்டாக்டர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 7 ஆவது நபரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்துப் பஞ்சாப் போலீசார் கூறுகையில், 'சில வாரங்களுக்கு முன்னர் டெல்லியில் இடம்பெற்ற மாணவி மீதான பாலியல் கொடுமையை அடுத்து நாடளாவிய ரீதியில் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மீடியாக்களும் உஷாராகியுள்ளன. போலிசாரும் அடுத்த கேள்வியின்றி பாதிக்கப் பட்ட பெண்களின் வாக்கு மூலத்தை அப்படியே ஏற்றுக் கொள்வதுடன் உடனடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.' என்று உணர்ச்சி படத் தெரிவித்தனர்.

0 Responses to இந்தியாவில் ஓயாத பாலியல் குற்றங்கள் - டெல்லி போன்றே பஞ்சாப்பில் கொடூரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com