Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யூடியூப்பில் மாத்திரமல்லாது, சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் கடந்த வாரம் சென்சேஷனல் ஆகியிருந்த வீடியோ மலேசியாவுடன் தொடர்புடைய 'Listen Listen Listen'.
 பொதுநிகழ்வொன்றில், சட்டக்கல்வி மாணவியொருவர் (கே.எஸ்.பவானி), மலேசியாவின் கல்வி முறைமை பற்றி விமர்சித்து பேசத்தொடங்கிய போது, அவரது பேச்சை இடைநிறுத்திய Suara Wanita 1 Malaysia நிறுவன தலைவர் ஷரிஃபா ஷோரா ஜபீன், 'Listen Listen Listen' என பேசத்தொடங்கினார்.

அம்மாணவி சொல்ல வந்த விடயத்தை முழுமையாக கேட்காமல் வலுக்கட்டாயமாக அவரது பேச்சைத் தடுத்து மைக்கை விலக்கியதுடன்,  அவரை அவமதிக்கும் முறையிலும் ஷரிஃபா பேசத்தொடங்கியதாக குற்றம் சுமத்தி யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ சென்சேஷனல் ஹிட் ஆகியிருந்தது. குறிப்பாக 'Listen Listen Listen' எனும் சொற்களை கொண்டு ரீமிக்ஸ் பாடல்கள்,  எஃப் எம் அரட்டைகள், டீஷேர்ட்டுக்கள், போஸ்டர்கள், ஆர்ப்பாட்டங்கள் என பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஷரிஃபாவுக்கு எதிராக அமைந்திருந்தன.

இந்நிலையில் இவ்வீடியோ தொடர்பில் நேற்று முதன்முறையாக ஷரிபா ஊடகங்களுக்கு  விளக்கமளித்தார்.  அப்போது அவர் குறித்த சட்டக்கல்லூரி மாணவி கே.எஸ்.பவானியை மன்னித்து விட்டதாகவும், அவரவர் தகுதி தெரியாது.  தன்னை மாத்திரம் தனிப்பட்ட வகையில் கடுமையான வார்த்தைகளால் தாக்கிப்பேசிய அனைவரையும் மன்னித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

ஒரு தாயின் உண்மைக்கதை!. - காணொளி இணைப்பு

எல்லைக்கோடு பகுதியில் இந்திய வீரரின் தலை துண்டிக்கப்பட்ட விவகாரம்!. காணொளி இணைப்பு 


அன்றைய நிகழ்வில் பேசப்பட்ட கடைசி விடயங்களை மாத்திரம் தொகுத்து இவ்வீடியோவை தயாரித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வீடியோ தொடர்பில் தனக்கும், தனது பிள்ளைகளுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகவும்,   தமது அலுவலகம் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும் ஷரிபா குற்றம் சுமத்தினார். மேலும் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலும் இதில் இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், 'மன்னிப்பு கேட்பதென்றால், குறித்த உத்தாரா பல்கலைக்கழகத்திடம் மாத்திரமே மன்னிப்பு கேட்பேன். இந்த விவகாரத்தில் அப் பல்கலைக்கழகத்தையும் இழுத்து பேசியிருக்கிறார்கள்' என்றார்.

ஷரிஃபாவின் இக்கருத்துக்கள் குறித்து பதில் அளித்துள்ள குறித்த சட்டக்கல்வி மாணவி கே.எஸ்.பவானி, 'ஷரிபாவிடம் நான் மன்னிப்பு கோரியதாக எனக்கு நினைவில்லையே. எனது அறிவுக்கு எட்டிய வகையில் அவர் எனது பேச்சை நிறுத்தும் வரையில், உண்மையைத்தான் பேசினேன். இலவச கல்வியை கோரும் உரிமையும், மாணவர்களின் கருத்துக்களை கூறும் உரிமையும் எமக்கு இருக்கிறது' என்றார்.

முறையின் படி ஷரிபா தான் பவானியிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென பல்வேறு அமைப்புக்கள் கோரி வருகின்ற போதும், அதற்கு அவசியமில்லை என பவானி மறுத்து வந்திருத்தது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஷரிபாவின் தலைமைத்துவத்தில் இயங்கும் குறித்த சௌரா வனிதா சத்து மலேசியா அமைப்பு நாளை இரவு நடக்கும், ஃபோரம் நிகழ்வு ஒன்றில் பேசுவதற்கு ஷரிபாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் அவர் அதில் கலந்து கொள்ள மாட்டார் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்து இந்த ஃபோரமில் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள வேண்டாம் என ஷரிபாவுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்ததாம்!

0 Responses to Listen Listen யூடியூப் வீடியோ விவகாரம் : கே.எஸ்.பவானியை மன்னித்துவிட்டாராம் ஷரிஃபா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com