Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

காஷ்மீர் எல்லைப்பகுதியில் கொல்லப்பட்ட இராணுவ வீரரின் தலையை பாகிஸ்தான் இராணுவத்தினர் உடனடியாக இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டுமென இந்திய இராணுவ தலைமை தளபதி பிக்ரம் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் இராணுவ வீரர்களால் இரு இந்திய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் முண்டம் மட்டுமே மீட்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த இராணுவ வீரரின் வீட்டுக்கு சென்று துக்கம் விசாரித்த பிக்ரம் சிங், பின்னர் இது தொடர்பில் விடுத்துள்ள அறிவிப்பில், அந்த இராணுவ வீரரின் குடும்பத்தினர் கடந்த ஆறு நாட்களாக உண்ணாவிரதமிருந்து வருகின்றனர். உயிரிழந்த இராணுவ வீரரின் தலையை உடனடியாக தங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென அவர்கள் கோரிவருகின்றனர். நாடளவில் இதற்கான அழுத்தம் அதிகரித்து வருகின்றது. இதை கருத்தில் கொண்டு உடனடியாக பாகிஸ்தான்  இராணுவத்தினர் கொண்டு சென்ற அந்த இராணுவ வீரரின் தலையை இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை இன்று நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது!

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ராணுவத் தலைமைத் தளபதி விக்ரம் சிங் "பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி செயல் பட்டு வருகிறது. நமது நட்டு இரு ராணுவ வீரர்கள் கொலலப் பட்டது, பாகிஸ்தான் திட்டமிட்டு செயத் சதி செயல். ஆனால் இரு ராணுவ வீரர்கள் இறந்தார்கள் என்பதை பாகிஸ்தான் ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

தங்கள் நாட்டு வீரர் ஒருவர் கொல்லப்பட்டதுதான் உண்மை என்று தொடர்ந்து கூறி வருகிறது. இந்திய காமாண்டர்கள் ஆக்ரோஷமாகத் தாக்குதல்கள் நடத்தினார்கள் என்றும் பாகிஸ்தான் குற்றம் சாட்டி உள்ளது. இந்திய ராணுவ கமாண்டர்களின் ஆக்ரோஷ்மானத் தாக்குதலை நான் பாராட்டுகிறேன். தாக்குதல் நடைபெற்றால் திருப்பித் தாக்கும் போது கமாண்டர்கள் ஆக்ரோஷமாகத்தான் செயல் படுவார்கள். இதில் தவறொன்றும் இல்லை என்று கூறியுள்ள விகரம் சிங், பாகிஸ்தான் தொடர்ந்து வாலாட்டிக் கொண்டிருந்தால், இந்தியா பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது. வாலை  ஒட்ட நறுக்க முற்படும்' என்றும் கூறியுள்ளார்.

0 Responses to இராணுவ வீரரின் தலையை பாகிஸ்தான் இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்: பிக்ரம் சிங்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com