Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கட்டாரில் பணியாற்றும் இலங்கையர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடந்த டிச.31ம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

வெங்கடாச்சலம் சுதேஷ்கர் எனும் 22 வயதான இந்த இளைஞரே மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

கட்டாருக்கு கடந்த 2010ம் ஆண்டு சென்ற அவர் அங்கு பணியாற்றிய சிறப்பங்காடி ஒன்றில், மோதல் ஒன்றின் போது சக பணியாளர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லப்பட்டது தொடர்பில் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார்.

சுமார் ஒன்றரை வருடங்கள் வழக்கு விசாரணையின் பின்னர் கட்டார் நீதிமன்றம் குறித்த இலங்கையருக்கு மரணதண்டனை விதித்துள்ளது. முன்னதாக கொல்லப்பட்டவரின் உறவினர் ஒருவருடன் சமாதானத்திற்கு வருவதற்காக ரூ.70 லட்சம் ரூபா இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரப்பட்டது. இலங்கை தூதரகத்தின் ஊடாக விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து அத்தொகை 35 இலட்சமாக குறைக்கப்பட்டது. எனினும் பணத்தை திரட்டுவதற்கு குறித்த் இளைஞரின் பெற்றோர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்,  இலங்கையிலிருந்து பணிப்பெண்ணாக சென்ற ரிசானா எனும் பெண்ணுக்கு சவுதி அரேபியாவில், கொலைக்குற்றச்சாட்டு ஒன்றில்  மரணதண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டிருந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வேலை வாய்ப்புக்களுக்காக செல்வோரின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும்,

இவ்வேலைவாய்ப்புக்களை இலங்கையர்கள் புறக்கணிக்க வேண்டுமெனவும் கோரி இலங்கையில் மனித உரிமை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் தொடர்ச்சியாக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையிலேயே மற்றுமொரு இலங்கையருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறித்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 Responses to சவுதியை தொடர்ந்து கட்டாரிலும் இலங்கையர் ஒருவருக்கு மரணதண்டனை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com