Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறிலங்கா அரசாங்கம் தனது போர்குற்றங்கள் மற்றும் ஈழத்தமிழர்கள் மேல் தொடர்ந்தும் நடத்திவரும் இன அழிப்பை கிரிக்கெற்றினால் மூடி மறைத்து வருகின்றார்கள்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிரிக்கெற்றினால் எவ்வாறு சிறிலங்கா அரசாங்கம் தனது குற்றச் செயல்களை மறைக்கின்றது தொடர்ந்தும் மறைக்க முயல்கின்றது.

போன்ற விடயங்களை எம் அணைவருக்கும் பரிட்சயமான ஊடகவியலாளர் Trevor Grant  மெல்பேனில் வெளிவரும் “The Age” என்ற பத்திரிக்கையில் மிகவும் விபரமாகவும் உறுதியாகவும் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.

20.01.2013 அன்று அவுஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான கிரிக்கெற் போட்டி நடைபெறவுள்ள அன்றைய தினத்தில் Trevor Grant  கூறியது போல சிறிலங்கா அரசாங்கம்.

தொடர்ந்தும் தனது குற்றச் செயல்களை கிரிக்கெற்றினால் மூடி மறைத்து செயற்படுவதை உலக மக்களுக்கு எடுத்துக் கூறுவதற்காக தமிழ் இளையோர் அமைப்பும் (TYO) Refugee Action Coalition அமைப்பும் இணைந்து ஆர்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளார்கள்.

இப் போராட்டத்தில் Trevor Grant அவர்களும் தானாகவே முன்வந்து சிறிலங்காவின் போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவர இணைந்துகொள்ள தீர்மாணித்துள்ளார்.

தமிழ் மக்களே!

வேற்று இனத்தவர்களே தாமாகவே முன்வந்து இத்தகைய போராட்டங்களை நாடத்தி தமிழின படுகொலைக்கு குரல் கொடுக்க ஈழத் தமிழர்களாகிய நாம் என்ன செய்கின்றோம்

சிந்திப்போம்!

எமக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது 20ம் திகதி ஞாயிற்று கிழமை அன்று Sydney Cricket Ground  இல் நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில் அனைத்து தமிழ் மக்களும் இணைந்து சிறிலங்கா அரசின் போர்குற்றத்தினை வெளிக்கொண்டுவருவோம்.
சிறிலங்கா அரசாங்கத்தின் போர்குற்றங்களுக்கும் தொடரும் இன அமிப்பிற்கும் தகுந்த தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரை எமது போராட்டங்கள் தொடரவேண்டும் தொடரும்.அணைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டு வாருங்கள்.
 Date: 20/01/2013
Time: 1pm to 3pm
Venue: Sydney Cricket Ground, Driver Ave (Moore Park Rd end)
Media Coverage of Sri Lankas visit so far:


0 Responses to துடுப்பாட்டத்தில் விளையாடி போர்குற்றத்தை மூடிமறைக்கிறது சிறீலங்கா-அவுஸ்திரேலியா தமிழ் மக்களே அணிதிரளுங்கள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com