Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குஜராத் மாநில முதல் பெண் முதல்வராக ஆனந்தி பென் படேல் பதவி ஏற்றுக்கொண்டார்.

நரேந்திர மோடி வருகிற 26ம் திகதி பிரதமராகப் பொறுப்பு ஏற்கவுள்ள நிலையில், அவர் தமது குஜராத் முதல்வர் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இதையடுத்து குஜராத் மாநிலத்தில் அமைச்சர் பொறுப்பில் இருந்த ஆனந்தி பென் படேல் அடுத்த முதலவராக ஒரு  மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், ஆனந்தி படேல்  இன்று குஜராத் மாநில முதல்வராகப் பொறுபேற்றுக்கொண்டார். இவரது பதவியேற்பு விழாவில் சுஷ்மா  சுவராஜ், அருண்ஜெட்லி உள்ளிட்ட முக்கியத்தலைவர்கள் கலந்துக்கொண்டனர்.

குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் ஆனந்தி பென் படேல் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to குஜராத் மாநில முதல் பெண் முதல்வராக ஆனந்தி பென் படேல் பதவியேற்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com