Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அல்ஜீரியாவில் கிளர்ச்சிப்படையினரால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள பல நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்களை விடுவிப்பத்து தொடர்பில் அல்ஜீரியா அரசு கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இன்று அங்கு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அங்குள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஆயுததாரிகளால் தடுத்து வைக்கப் பட்டிருந்த 650 பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் 60 பணயக் கைதிகள் வரை ஆயுததாரிகல் கட்டுப்பாட்டில் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அமெனாஸ் எனும் இடத்தில் விடுவிக்கப்பட்ட இப்பணயக் கைதிகளில் 573 அல்ஜீரியர்களும் 132 வெளிநாட்டு ஊழியர்களும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்ட இடத்தில் ஒரு பரந்த பிரதேசம் இன்னமும் ஆயுததாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் இவர்களுடன் போரிடாமல் சமாதான வழியிலான ஒரு முடிவுக்கு வரவே தாம் விரும்புவதாகவும் அல்ஜீரிய இராணுவம் தெரிவித்துள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் அல்ஜீரிய அரசு அவசரமாக அங்கு இராணுவ ரீதியில் தாக்குதல் நடத்த முயற்சித்ததில், 34 பணயக்கைதிகள் பலியாகிப்போனார்கள். இந்நடவட்க்கை சர்வதேசத்திடம் கடும் அதிருப்தியையும் சம்பாதித்திருதது.

அப்படியிருந்தும் நேற்று வியாழக்கிழமை அல்ஜீரிய இராணுவத்தால் மறுபடி மேற்கொள்ளப்பட்ட முற்றுகையில் 4 வெளிநாட்டு ஊழியர்கள் இடையில் சிக்கிப் பலியாகிப்போனார்கள்.   இம்முற்றுகை மிகக் கவனமாக வழிநடத்தப்பட்டு எரிபொருள் டாங்கிகள் வெடிக்காமல் பயணிகள் மீட்கப்பட்டதாக அல்ஜீரிய அரசு தெரிவித்திருந்தது.

0 Responses to அல்ஜீரிய கிளர்ச்சியாளர்களிடம் பணயக் கைதிகளாக சிக்கித்தவிக்கும் வெளிநாட்டவர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com