இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய அமைப்பின்
உச்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரித்தானியா, கனடா உள்ளிட்ட முக்கிய சில
நாடுகள் தீர்மானித்திருப்பதாக தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட முடியாத தகவல்
வெளிவந்த வண்ணமுள்ளன.
குறிப்பாக இந்த மாநாட்டை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைப்பதற்காக பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவரும், பிரிட்டன் மகாராணியாருமான எலிசபெத் தனது இலங்கை பயணத்தை இரத்து செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் மோசமாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிரான அடக்குமுறை, மற்றும் அண்மைய பிரதம நீதியரசர் பதவி நீக்கம் விவகாரம் என்பவற்றால் இலங்கை மாநாட்டை புறக்கணிக்க குறித்த நாடுகள் முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் மனித உரிமை விவகாரங்களில் முன்னேற்றம் ஏற்படாவில்ட்டாம் தாம் நிச்சயமாக அங்கு நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணிப்போம் என பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன், கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் ஆகியோர் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
அதே போன்று ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்வது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டியிருப்பதாக தெரிவித்துள்ளன.
இதேவேளை, பொதுநலவாய மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் அதன் செயலாளர் கமலேஷ் ஷர்மா இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இவர் அண்மையில் ஷிராணி பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இதேவேளை பொதுநலவாய நாடுகள் அமைப்புக்கு என்ன பெறுமதி உள்ளது என ஐ.நாவுக்கான இலங்கை வதிவிட பிரதிநிதி பாலித கோஹன்ன கேள்வி எழுப்பியுள்ளதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூயோர்க்கில் பாலிதவிடம் ஒரு செய்தியாளர், கமலேஷ் ஷர்மாவின் கருத்துக்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த போதே பாலித இவ்வாறு தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கை பொதுநலவாய நாடுகள் மாநாட்டை புறக்கணிக்குமா பிரிட்டன்?