அமெரிக்க உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் பணிப்புரையின் பேரில், தென் மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை ராஜாங்க செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்கின் கீழ் கடமையாற்றி வரும் மூன்று துணை செயலாளர்களே இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும் இவர்கள் ஷிரானி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் மாத்திரம், இலங்கைக்கு விஜயம் செய்யவில்லை எனவும், இலங்கையின் சட்டம், ஒழுங்கு, ஜனநாயக நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துவார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேபோன்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையும், இலங்கைக்கு விரைவில் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை பிரதம நீதியரசர பதவியிலிருந்து ஷிராணி பண்டாரநாயக்க நீக்கம் செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா விடுத்திருந்த கண்டனத்தை இலங்கை அரசு உதாசீனம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா உதவாவிடின் தமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை, சீனாவிடமிருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இலங்கைக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்தினால், நாம் சீனாவிடமிருந்து தேவையானவற்றை பெற்றுக்கொள்வோம். அமெரிக்கா எப்போதும் பிழையான தகவல்களின் அடிப்படையிலேயே தொடர்ந்தும் செயல்பட்டு வருகிறது. தற்போது ஷிராணியை பதவி நீக்கம் செய்யப்பட்டதும், அமெரிக்காவுக்கு பிரச்சினையாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விதம் இலங்கை முதலீடுகளில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என அண்மையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் சீசன் எச்சரித்திருந்தார்.
இதேவேளை ஷிராணி பண்டார நாயக்கவின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் கோரியுள்ளது. ஷிராணி பண்டாரநாயக்க மற்றும் ஏனைய மனித உரிமை செயற்பாட்டாளர்களின் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ஷிராணி பதவி நீக்கம் செய்யப்பட்ட விதம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து உன்னிப்பாக அவதனைத்து வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to 'அமெரிக்கா இல்லையென்றால் சீனா!': கோத்தபாய