Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நான் ஹீரோ அல்ல! - பவானி

பதிந்தவர்: தம்பியன் 19 January 2013

நான் சாதாரணமானவள். நான் ஒரு ஹீரோ அல்ல. என்னை ஹீரோ வாக ஆக்கி விட வேண்டாம் என்று மலேசிய சட்டக் கல்லூரி மாணவி கே.எஸ். பவானி நேற்று கூறியுள்ளார்.

ஒரே மலேசியா சுவாரா வனித்தா எனும் அமைப்பு நடத்திய கலந்துரையாடலின் போது என்னைத் திட்டிய அதன் தலைவர் ஷரிபா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவும் இல்லை என்று அவர் நேற்று நடை பெற்ற நிருபர்கள் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஷரிபா என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் விரும்பவில்லை. அது முக்கியமல்ல என்று பவானி சொன்னார். 

இந்த பிரச்சினையை யாரும் இனப்பிரச்சினையாக ஆக்கிவிட வேண்டாம் எனவும் எல்லாத்தரப் பினரும் இலவச கல்விக்காக போராட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அக்கலந்துரையாடலில் நடந்த சம்பவம் யூடியூப்பில் வெளியான  பிறகு எனக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்துள்ளது. இதனை நான் எதிர் பார்க்கவில்லை. அன்றைய தினம் நான் தனி ஆளாக இருந்தேன்.

ஆனால் இன்று நீதியை நிலைநிறுத்த பல்லாயிரம் பேர் எனக்கு ஆதரவாக இருக்கின்றனர் என்றார் பவானி.  அந்த கலந்துரையாடலில் உரத்த குரலில் ஏன் பேசினீர்கள் என கேட்கப்பட்ட போது என்னுடைய வழக்கமான குரலே அப்படித்தான் இருக்கும் என்று அவர் பதிலளித்தார்.

பவானி அக்கலந்துரையாடலில் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் ஷரிபா பொறுமை இழந்து விட்டார் என்று அந்த இயக்கம் கூறியிருக்கிறது. இதற்கிடையே ஷரிபா மன்னிப்பு கேட்க மாட்டார் என்று அந்த இயக்கத்தின் பேச்சாளர் எமா  லீ அபு சமா தெரிவித்தார். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்றார் அவர்.

தொடர்பு பதிவு : 'Listen Listen' : இணையத்தை கலக்கும் புதிய வீடியோ இது!

0 Responses to நான் ஹீரோ அல்ல! - பவானி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com