Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பில் அமெரிக்காவின் கரிசனைக்கு, வெள்ளை மாளிகைக்கு தொடர்ச்சியாக அனுப்பப்பட்ட மனுக்களும் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

 அமெரிக்க அதிபரை நேரடியாக சென்றடையும் வகையில் வெள்ளை மாளிகையினால் நிர்வகிக்கப்பட்டு வரும் We the People இணையத்தளத்திற்கு இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தொடர்ச்சியாக மனுக்கள் அனுப்பப்பட்டு வந்தன.

இதையடுத்தே இலங்கை விவகாரங்களை மையப்படுத்தி அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  இதேவேளை அமெரிக்க துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் தொடர்பில் இந்த இணையத்தளத்திற்கு 150,000 மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கையின் வடக்கு, கிழக்கு தமிழ் பெண்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அமெரிக்க முதல் பெண்மணியான மிச்செல் ஒபாமாவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாரக் ஒபாமாவிற்கான தமிழர் அமைப்பு இதற்கான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பெண்களில் பலர் நெருக்கடிகளை எதிர் நோக்கி வருவதாகவும், யுத்தத்தின் போது கணவரை இழந்த பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் குடும்ப தலைமை பொறுப்பை வகித்து வருவதாகவும், வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதகாவும்,  குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கை விவகாரங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறு ஒபாமா மற்றும் மிச்செலுக்கு அழுத்தம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com