Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் காங்கிரஸ் கட்சியின் குடியரசு உறுப்பினர்களும் இணைந்து அமெரிக்க நிதிப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதாவது வருடக் கடைசியில் பெறப்படும் வரவு செலவுத் திட்டத்தினை தடை (seal) செய்ததன் மூலம் செலவினக் குறைப்புக்களை இல்லாமல் செய்து அதன் மூலம் வருடக் கடைசியில் ஏற்படும் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நடவடிக்கை குறித்து Wall Street Journal பத்திரிகை அறிக்கை வெளியிடுகையில், இந்த தீர்மானம் மூலம் 2013 ஜனவரி தொடக்கத்தில் மிஞ்சக் கூடிய $110 பில்லியன் டாலர் பெறுமதியுள்ள செலவினக் குறைப்பு (spending cuts) தாமதமாக்கப் படுவதாக கூறியுள்ளது. மேலும் இவ் வருடக் கடைசில் ஏற்பட்டிருக்கும் காலக்கெடு (deadline) தவறவிடப்பட்டால் அது உடனடியாக ஒரு பொருளாதாரப் பாதிப்பை ஏற்படுத்த வல்லது என்றும் கூறப்படுகின்றது.

இதேவேளை சமீபத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து ஒபாமா உரையாற்றுகையில், அமெரிக்காவின் நிதிப் பற்றாக்குறை மற்றும் வரிவிதிப்பு ஆகியவற்றில் கொண்டு வரப்படவுள்ள சீர் திருத்தங்கள் அங்கு அதிகளவில் வாழும் நடுத்தர வர்க்க மனிதர்களுக்கு அதிக வரிச்சுமை ஏற்படாத வண்ணம் அமையும் ஒப்பந்தமாகவே அமையும் எனக் கூறியுள்ளார்.

மேலும் வருட வருமானம் $200 000 டாலர்களுக்கும் குறைவான  தனிநபருக்கும், $250 000 டாலர்களுக்கும் குறைவான தம்பதியினருக்கும் வரிவிதிப்பு வழங்கப் படுவதை விரிவாக்க அமெரிக்க செனட் தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது.

fiscal cliff எனப்படும் பதம் வரி அதிகரிப்பு, செலவினக் குறைப்பு (spending cuts), வரவுசெலவுத் திட்டத்தின் வீழ்ச்சி ஆகிய காரணிகளால் பொருளாதாரத்தில் எற்படும் விளைவுகளை விளக்குவதற்கே பயன்படுத்தப் படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to அமெரிக்க நிதிப்பற்றக்குறையை தீர்க்க ஒபாமா அரசு அதிரடி நடவடிக்கை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com