கோவை
ஆர்.எஸ்.புரம் சுப்பிரமணியம் லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் காளிஸ்வரன். இவரது
மகன் பிரதிப்குமார் (16). இவர் சொக்கம்புதூரில் உள்ள தனியார் பள்ளியில்
பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று
பள்ளியில் சமீபத்தில் நடந்த அரையாண்டு தேர்விற்கான விடைத்தாள்களை
வழங்கியுள்ளனர். இதில் பிரதீப்குமார் மார்க் குறைவாக எடுத்ததாக தெரிகிறது.
இதனால் பெற்றோருக்கு தெரிந்தால் திட்டுவார்கள் என பயந்து சோகத்தில் சக
மாணவர்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளான்.
மாலை
பள்ளி முடிந்து வீடு திரும்பிய பிரதீப்குமார் முதல் மாடியில் உள்ள அறைக்கு
சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக மகன் கீழே
இறங்கி வராததால் பெற்றோர் மேலே சென்று பார்த்தனர்.
அங்கு பிரதீப்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.
தகவல்
கிடைத்ததும் ஆர்.எஸ்.புரம் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் தற்கொலை குறித்து விசாரித்து
வருகிறார்.
0 Responses to அரையாண்டில் மதிப்பெண் குறைவாக எடுத்ததால் மாணவன் தற்கொலை