Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”


வரும் 28.01.2013 திங்கள் மாலை 5மணிக்கு தஞ்சை - திருச்சி சாலையில் உள்ள சானூரப்பட்டி என்னும் கிராமத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பெயரில் மாளிகையும், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரன், பாவலரேறு பெருஞ்சித்தனார், எஸ்.டி.எஸ்.சோமசுந்தரம்  ஆகியோர்களின் நினைவாக வணிகவளாகங்களும், இல்லமும் திறப்புவிழா நடைபெற உள்ளது.

இன் நிகழ்வின் திரு.வை.கோ, திரு.பழ .நெடுமாறன், திரு.இரா .நல்லகண்ணு, புதியபார்வை ம.நடராசன், திரு .பெ.மணியரசன், புலவர் புலமைப்பித்தன் இன்னும் பலர் இன் நிகழ்வில் கலந்துகொள்வர்.

இதே நாள்  சானூரப்பட்டி கிராமத்தில் தழல் ஈகி முத்துக்குமார் 4ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது இன் நிகழ்விலும் மேற்சொன்ன தலைவர்களுடன் தோழர் கி .வெங்கட்ராமன் (பொதுச்செயலாளர் ,த .தே .பொ .க )கலந்துகொள்வார்கள் .

இவ் இரு நிகழ்வுகளையும் அன்னை தெய்வானை இரத்தின சாமி அறக்கட்டளை சார்பில் புலவர் இரத்தினவேலன்  அவர்கள் ஒழுங்கு படுத்தியுள்ளார் .


0 Responses to தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் பெயரில் தமிழ்நாட்டில் மாளிகை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com