Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹொங்கொங்கில் பணியாற்றும் இலங்கை உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள், திருகோணமலை மூதூர் பணிப்பெண் ரிசானா நபீக்கிற்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
 
குறித்த பணியாளர்களுடன் ஹொங்கொங்கில் நிலைகொண்டுள்ள பல்வேறு மனித உரிமைகளைப் பேணும் அமைப்புக்களும் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் இணைந்துள்ளன.

ரிசானா நபீக்கிற்கான மரண நிறைவேற்றப்பட்டு 6 நாட்கள் நிறைவடைந்த நிலையில் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தமது அதிருப்தியினை வெளியிட்டிருந்தது..

இதேவேளை, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை தூதுவரும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் இந்த தண்டனையை ரத்து செய்ய எடுத்த முயற்சிகள் கைகூடவில்லை எனவும் ஹொங்கொங் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

0 Responses to ஹொங்கொங்கில் பணியாற்றும் தொழிலாளர்கள் ரிசானாவின் மரணதண்டனைக்கு கண்டனம் தெரிவிப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com