Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைக்கு விஜயம்  மேற்கொள்ளும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
 
இலங்கையின் மனித உரிமைகள் நிலையை மதிப்பீடு செய்வதற்கு, ஜனவரி மாதம் அங்கு செல்லவுள்ளதாக முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருந்தார்.

ஜனவரி மாதம் முடிவடைவதற்கு இன்னமும் 12 நாட்களே உள்ள நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்டது போன்று, இலங்கைக்குச் செல்லும் திட்டம் உள்ளதா என்று இன்னர் சிற்றி பிரஸ் செய்தியாளர் நேற்று நவநீதம்பிள்ளையிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவர், ஆம், இலங்கைக்கு செல்லும் திட்டம் உள்ளது என்று பதிலளித்துள்ளார். எனினும், அவர் தனது பயணம் எப்போது இடம்பெறவுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை.

சட்ட முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை, பதவியில் இருந்து விலக்கிய குற்றவியல் செயற்பாடு நாட்டின் சட்ட முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சார்பான பேச்சாளர் ரூபட் கொல்வின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடானது, நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடும் செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனிடையே, குற்றவியல் செயற்பாட்டின் போது, பிரதம நீதியரசருக்கு ஆதரவு வழங்கிய சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாக உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சார்பான பேச்சாளர் ரூபட் கொல்வின் தெரிவித்துள்ளார்.

0 Responses to இலங்கைக்கு விஜயம் செய்யும் திட்டம் உள்ளது! - நவநீதம்பிள்ளை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com