இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நீண்ட கால வரலாற்று ரீதியான தொடர்புகள் காரணமாகவே தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத் தீர்மானம் இந்திய மத்திய அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இலங்கைக்கும் இந்திய மத்திய அரசாங்கத்துக்கும்
இடையிலான இராஜதந்திர ரீதியிலான உறவுகளில் எள்ளளவேனும் பாதிப்புகள்
ஏற்படவில்லையென்றும் அமைச்சர் கூறினார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த ஒரு தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அதில், தமிழ் ஈழம் அமைப்பது குறித்து இலங்கை தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இலங்கையை ‘நட்பு நாடு' என அழைக்கக்கூடாது என்றும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கான தமிழீழத் தீர்மானத்தை முற்றாக நிராகரிப்பதாக இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்திருந்தார். இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் இக்கருத்துக் குறித்து கேட்டபோதே, நீர்வழங்கல் வடிகாலமைப்புத்துறை அமைச்சரும், ஆளும் கட்சியின் பிரதம கொரடாவுமான தினேஷ் குணவர்த்தன மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
இலங்கைக்கும், இந்தியாவுக்குமிடையில் நீண்டகாலமாக வரலாற்று ரீதியான தொடர்புகள் காணப்படுகின்றன. நாம் இந்திய மத்திய அரசாங்கத்துடனேயே இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளைப் பேணி வருகின்றோம்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விட இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்புகள் நீண்டகாலமானவை.
1961ம் ஆண்டு தமிழகத்தைத் தனிநாடாகப் பிரிப்பதற்கு சதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும், இதனை அப்போதைய இந்தியப் பிரதமர் முறியடித்திருந்தார்.
இருந்தபோதிலும் அவ்வாறான முயற்சிகள் மீண்டும் தமிழகத்தில் நிழலாடிக்கொண்டிருக்கின்றன.
அதேபோல, மத்திய அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கும் நடவடிக்கைகளிலும் தமிழகத்திலுள்ள சில தரப்பினர் ஈடுபடுகின்றனர். மேலைத்தேய நாடுகளின் சூழ்சிகளினாலேயே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதேவேளை, இலங்கையில் பிரிவினையை விரும்பியவர்களும் தற்பொழுது தமிழகத்தில் இருக்கின்றனர். இந்த இரண்டு தரப்பினரும் இணைந்தே நிலைமையை மோசமாக்கி வருகின்றனர்.
எனினும், இவ்வாறான முயற்சிகள் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் எள்ளளவேனும் பாதிப்பு ஏற்படாது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

0 Responses to தமிழக தமிழீழத் தீர்மானம் மத்திய அரசினால் நிராகரிப்பு! இலங்கை, இந்திய நல்லுறவே காரணமாம்!